விஜய் கூட்டத்திற்குத் துப்பாக்கியுடன் வந்த ஆசாமி.. புதுச்சேரியில் தவெக கூட்டத்தில் திடீர் பதற்றம்
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டம் நடைபெறுகிறது. தவெக கட்சித் தலைவர் விஜய் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்கிடையே புதுச்சேரி உப்பளம் பகுதியில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்திற்குத் துப்பாக்கியுடன் வந்த ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நபரைப் பிடித்து போலீசார் இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக பொதுக்கூட்டம் இன்று புதுச்சேரியில் நடைபெறுகிறது. அங்கு உப்பளம் பகுதியில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்திற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல நூறு போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் பிரச்சாரம்
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பலத்த சோதனைக்கு பிறகே தொண்டர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். க்யூஆர் கோட் வைத்திருக்கும் நபர்களுக்கு செக் செய்த பிறகே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நுழைவு இடங்களில் மெட்டல் டிடெக்டர்களும் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை தொண்டர்கள் வழக்கம் போல உள்ளே சென்று கொண்டு இருந்த நிலையில், அப்போது திடீரென மெட்டல் டிடெக்டரில் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக அலர்ட் ஆன போலீசார், அந்த நபரைப் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் இடுப்பில் கைத்துப்பாக்கியை வைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த டேவிட் என்பது தெரிய வந்தது.
யார் அந்த நபர்
அவர் சிவகங்கை தவெக மாவட்டச் செயலாளரின் தனிப்பட்ட செக்யூரிட்டி என்றும் கூறியிருக்கிறார். மேலும், துப்பாக்கி வைத்திருக்கத் தன்னிடம் உரிய லைசென்ஸ் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இருப்பினும், மாவட்டச் செயலாளர் இல்லாமல் தனியாக வந்ததால் போலீசார் குழப்பமடைந்தனர். அவரை தனியாக அழைத்துச் சென்று சைசென்ஸ் வாங்கி செக் செய்தனர். மேலும், அவர் சொல்வது சரிதானா என்றும் விசாரித்துள்ளனர்.
விசாரணையில் அவர் சொன்னது உண்மை என்றே தெரிய வந்துள்ளது. இருப்பினும், புதுச்சேரியில் நடைபெறும் கூட்டத்திற்குத் தமிழ்நாட்டில் இருந்து யாருக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவர் எப்படி வந்தார் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், லைசென்ஸ் இருந்தாலும் இவ்வளவு பேர் கூடும் இடத்திற்குத் துப்பாக்கியுடன் வர வேண்டிய தேவை என்ன என்றும் கேள்வி எழுப்பினர்.

விதிகள் என்ன
இதற்கிடையே ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கருணாகரன் இது தொடர்பாக நியூஸ் 18 சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் ஒருவர் சைலென்ஸ் வைத்திருந்தால் துப்பாக்கி எடுத்து வர அனுமதி உண்டு எனக் கூறியிருந்தார். அவர் மேலும், "எங்கெல்லாம் துப்பாக்கியை எடுத்துச் செல்லலாம் என்பது லைசென்ஸில் குறிப்பிடப்பட்டு இருக்கும். புதுச்சேரிக்கும் சேர்த்து அனுமதி வாங்கி இருந்தால் அவர் எடுத்துச் செல்லலாம். அந்த அனுமதியை போலீசாரிடம் காட்டி விளக்கினால் போதும்" என்று அவர் கூறியிருந்தார்.
புஸ்ஸி ஆனந்த்
இந்தச் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடமும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என மட்டும் பதிலளித்தார். தமிழகத்தைச் சேர்ந்தவரை அனுமதித்தது ஏன் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
-
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஸ்பெஷல் ஐட்டம்.. வில்லிவாக்கத்தில் களமிறங்கும் சபரீசனின் வலதுகரம் -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு












Click it and Unblock the Notifications