புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் சீட்டை காப்பாற்ற... பாஜகவிடம் சரணடைந்த "சாமி".. போட்டு தாக்கும் மாஜி முதல்வர் "சாமி"!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக பாஜகவிடம் ரங்கசாமி சரணடைந்துவிட்டார் என முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி கூறினார்.

Recommended Video

    பேரறிவாளன் விடுதலை குறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி மாஜி முதல்வர் - வீடியோ

    புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ரங்கசாமி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

    3 பிளான் + 2 குறி.. ஸ்டாலின் கணக்கு நொறுங்குகிறதா.. திமுகவை டேமேஜ் செய்ய போகும் எடப்பாடி.. பாஜக குஷி3 பிளான் + 2 குறி.. ஸ்டாலின் கணக்கு நொறுங்குகிறதா.. திமுகவை டேமேஜ் செய்ய போகும் எடப்பாடி.. பாஜக குஷி

    இந்நிலையில் புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

     பேரறிவாளன் விடுதலை ஏன்?

    பேரறிவாளன் விடுதலை ஏன்?

    ‛‛ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில் விடுதலையில் முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் ஆளுநரா? குடியரசு தலைவரா? என விவாதிக்கப்பட்டு ஆளுநருக்கு தான் என தீர்ப்பு வழங்கியது. இதன்படி பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு பல கட்டங்களில் முடிவெடுக்காத நிலையால் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    கடவுள் நீதிமன்றத்தில் தண்டனை

    கடவுள் நீதிமன்றத்தில் தண்டனை

    இதனை பல அமைப்புகள் பட்டாசு வெடித்து கொண்டாடுவது, இனிப்பு வழங்குவதை பார்க்கும் போது உண்மை தொண்டனாகிய எங்களுக்கு எல்லாம் மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. சில வக்கிரபுத்தி உள்ள அமைப்புகள் தான் கொண்டாடியுள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட 8 பேர் இந்த நாட்டின் தியாகிகள் இல்லை. நீதிமன்றம் வேண்டுமென்றால் சட்டப்பூர்வமான பல காரணங்களுக்காக இவர்களை விடுதலை செய்யலாம் ஆனால் கடவுள் நீதிமன்றத்தில் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

    சாதனைகள் இல்லை

    சாதனைகள் இல்லை

    பாஜக ஆட்சியில் வேதனையை தவிர சாதனைகள் இல்லை. இவர்கள் பொதுமக்களிடம் சென்றால் மக்கள் அவர்களை விரட்டியடிப்பார்கள் மேலும் புதுச்சேரி அரசு ரகசியமாக மின்துறையை தனியார்மயமாக்க ஏற்றுகொள்கிறோம் என முதலமைச்சர் ரங்கசாமி கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தபிறகு இது நடந்துள்ளது.

    பாஜகவிடம் சரணடைந்தார்

    பாஜகவிடம் சரணடைந்தார்


    இதே போல் காந்திசிலை - பாகூர் எல்லைவரை ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இந்த ஒப்பந்தம் காரணமாக புதுச்சேரி மாநிலம் சுடுகாடாகிவிடும். டம்மி முதலமைச்சராக ரங்கசாமி செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் பதவியில் நீட்டிக்கவேண்டும் தனது நாற்காலியை காப்பாற்றி கொள்வதற்காக பாஜகவிடம் அவர் சரணடைந்துவிட்டார்'' என தெரிவித்துள்ளார்.

    English summary
    Former Congress chief Minister Narayanasamy has says that Rangasamy had surrendered to the BJP to keep the post of Pudhucherry CM.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X