நகருக்கு நடுவே முதல்வர் படத்துடன் மாஸ் பேனர்... புதுச்சேரியில் தாதா அடாவடி
புதுச்சேரி: சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதி ஒருவர், காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பொதுஇடத்தில் பெரிய பிளக்ஸ் பேனர் வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரபாக பேசப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்களின் புகைப்படங்களுடன் நகரின் மையப் பகுதியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவடி மர்டர் மணிகண்டன். பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்.

ரவுடி வைத்துள்ள பேனர்
இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை கைதியாக காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் தண்டனை பெற்று வருகிறார். இந்நிலையில் ரவுடி மர்டர் மணிகண்டன், காங்கிரஸ் பிரமுகர் ஜேம்ஸ் என்பவரின் பிறந்த நாளுக்காக, நகரின் மையப் பகுதியான அண்ணா சாலையில் பேனர் வைத்துள்ளார்.

பேனரில் முதல்வர் படம்
அந்த பேனரில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் இருந்தும் நகராட்சியில் அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கேள்விகுறி
சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதி ஒருவர், காங்கிரஸ் பிரமுகரின் பிறந்த நாளுக்கு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் படங்களை இடம்பெறச் செய்து பிறந்த நாள் வாழ்த்து பேனர் வைத்திருப்பது பொதுமக்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கி உள்ளது.

முதல்வர் செல்லும் பாதை
இத்தனைக்கும் முதலமைச்சர் நாராயணசாமி தனது நெல்லித்தோப்பு தொகுதிக்கு நாள்தோறும் அந்தவழியாக பலமுறை சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications