இரவில் உல்லாசம்.. புதுச்சேரியில் மசாஜ்க்கு பெண்கள் ரெடி.. ஒரே நொடியில் பரபரத்த இணையம்.. போலீஸ் அதிரடி
புதுச்சேரி: மசாஜ் செய்ய பெண்கள் தயாராக உள்ளனர் என்ற விளம்பரங்கள் இணையத்தில் வெளிவந்ததையடுத்து, புதுச்சேரி போலீசார் அலர்ட் ஆகிவிட்டனர்.. இதுகுறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றையும் பொதுமக்களுக்கு விடுத்திருக்கிறார்கள்.
சமீபகாலமாகவே, பிரபல வங்கிகளின் பெயர்களை சொல்லி, மோசடிகள் பெருகி வருவதால், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும் என்று வங்கிகள் தொடர்ந்து அறிவுறுத்தியபடியே வருகின்றன.

கிரைம் போலீஸ்: அதேபோல சைபர் கிரைம் போலீசாரும், பொதுமக்களை அலர்ட் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.. எந்த வங்கியிலிருந்தும், ஒருபோதும் ஓடிபி-யை யாருமே கேட்க மாட்டார்கள். அதனால், யாராவது உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால், தெரிவிக்க வேண்டாம்.. அவர்களது இணைப்பையும் துண்டித்துவிடுங்கள் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் மும்பையை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் மொகமத் இக்பால் என்பவரும் இந்த மோசடியில் சிக்கினார்.. தாதர் என்ற பகுதியில் வசித்து வரும் இவர், தன்னுடைய உடல்நலம் தொடர்பாக எலும்பு சிகிச்சை டாக்டரை சந்திக்க விரும்பினார். இதற்காக தன்னுடைய பகுதியிலேயே யாராவது பிரபல டாக்டர்கள் இருக்கிறார்களா? என்று ஆன்லைனில் ஒரு நம்பரை கண்டெடுத்து, டாக்டரை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
10 ரூபாய்: போனில் பேசிய நபர் டாக்டரை பார்க்கவேண்டுமானால், ரூ.10 தந்து, முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றாராம்.. இக்பாலும் 10 ரூபாய் பணம் அனுப்புவதற்கு அந்த இரண்டு லிங்க்குகளை ஓபன் செய்துள்ளார். ஆனால், அதில் பணம் அனுப்ப முடியவில்லை... இதனால், தன்னுடைய அக்கவுண்ட்டில் ஏதோ பிரச்சனையில் என்பதை உணர்ந்த இக்பால், தனது வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார். அப்போதுதான், இக்பால் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.77 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
புதுச்சேரியிலும் ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது.. இளைஞர் ஒருவர், தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்... இவர் ஆன்லைனில் மசாஜ் செய்வதற்காக பெண் தேடியுள்ளார். அப்போது, ஆன்லைனில் கால் கேர்ள் விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில், ஒரு செல்போன் நம்பர், மற்றும் ஐஃபை மாடல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.6 ஆயிரம், ஒரு நாள் முழுதும் ரூ.15 ஆயிரம் மற்றும் கால் கேர்ள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 ஆயிரம், ஒரு நாள் முழுதும் ரூ.10 ஆயிரம் என சில பெண்களின் போட்டோக்கள் இருந்துள்ளது.
இதை நம்பி அந்த இளைஞரும், முழுதொகையான 30 ஆயிரம் ரூபாயை அனுப்பினார். பணம் அனுப்பிய 3 மணி நேரம் ஆகியும், மர்ம நபரிடம் இருந்து எந்தவித தகவலும் வராததால், சந்தேகமடைந்த பிரவீன் மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அப்போதுதான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த இளைஞர், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரிடம் ஓடியிருக்கிறார்.. இதுகுறித்து புகாரும் தந்தார்.. இதையடுத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.
வசதிகள்: எதிர்முனையில் பேசிய நபர், முன்பணம் செலுத்தினால், அனைத்து வசதியும் ஏற்பாடு செய்து தருகிறோம் என்றாராம். உடனே இந்த இளைஞரும், ரூ.30 ஆயிரம் கட்டியிருக்கிறார்.. ஆனால், அதற்கு பிறகு, ஒருபதிலும் வரவில்லையாம். அந்த நம்பருக்கு போன் செய்தாலும் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
அப்போதுதான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த இளைஞர், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரிடம் ஓடியிருக்கிறார்.. இதுகுறித்து புகாரும் தந்தார்.. இதையடுத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.
பெண்கள்: இது சம்மந்தமாக இன்று சைபர் கிரைம் எஸ்.பி பாஸ்கரன் சொல்லும்போது, "இதுபோன்ற பெண்கள் சம்பந்தமாக தேடுபவர்கள் பெரும்பாலும் பொய்யான நபர்களால் அல்லது இணைய வழி மோசடிக்காரர் ஏமாற்றப்படுகிறார்கள். எனவே, இணையவழியில் இதுபோன்ற "மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் இருக்கின்றனர்" என்று வருகின்ற அனைத்து தகவல்களுமே இணைய வழி மோசடிக்காரர்களால் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக இளைஞர்களை குறி வைத்து ஏமாற்ற பயன்படுகிறது.
எனவே, பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். மேலும் பெரும்பாலான இளைஞர்கள் பணத்தை அனுப்பிவிட்டு இது சம்பந்தமாக புகார் தெரிவிக்கவே தயக்கம் காட்டுகிறார்கள்.. இதுபோன்று புகார் அளிக்க முன்வராத காரணத்தினால் இணையவழி மோசடிக்காரர்கள் இவற்றை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். அதனால், பாதிக்கப்படுவோர் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும்.
புகார்கள்: அத்துடன், இது சம்மந்தமான வழக்கில் பணம் பெற அனுப்பிய ஜிபே வங்கி விவரங்களை பெற்று ஆராய்ந்தபோது கடந்த இரண்டு மாதங்களில் ரூ.7 லட்சத்துக்கு மேல் பணம் பரிவர்த்தணை ஆகியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பணம் அனைத்துமே இதுபோன்று இளைஞர்களை குறி வைத்து ஏமாற்றி பெறப்பட்ட பணமாகவே இருக்கும்.. இந்த வழக்கை விசாரித்து கொண்டிருக்கிறோம்" என்றனர்.
இது ஒருபுறமிருக்க மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.. இதையடுத்து, காவல் துறை இத்தகைய சென்டர்களை குறிவைத்து அதிரடி நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. அனுமதியில்லாத மசாஜ் சென்டர்களை ரகசியமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி அனுமதியில்லாமல் சந்தேகத்துக்கு இடமாக இயங்கும் மசாஜ் சென்டர்களை சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தகைய மசாஜ் சென்டர்களை யார் நடத்துகிறார்கள்? மசாஜ் அல்லது ஆயுர்வேத முறை என எந்த பெயரில் இருந்தாலும், இதற்காக பிரத்யேக பயிற்சி மற்றும் கல்வி தகுதி கொணகொண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா? என்றெல்லாம் விசாரணைகளை போலீசார் நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications