'வட போச்சே'.. புதுவை இளைஞர்களை ஏமாற்றிய சன்னி லியோன்.. நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே ஓட்டம்!
புதுச்சேரி: நமக்கு பல வகையிலும் இன்பங்கள், துன்பங்கள் என வழங்கிய 2021-ம் ஆண்டு நிறைவு பெற்று 2022-ம் ஆண்டு பிறந்து விட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு களைகட்டியது. ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக வழக்கமான கொண்டாட்டம் இல்லை.
ஆனால் புதுச்சேரியில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாநில அரசு அனுமதி அளித்தது. இதனால் நேற்று புதுவை கடற்கரை பகுதியில் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாட்டப்பட்டது.

கவர்ச்சி நடிகை சன்னி லியோன்
இது ஒருபக்கம் புதுவை இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க, இன்னொரு சந்தோஷமும் அவர்களை வந்து ஒட்டியது. கவர்ச்சி நடிகை சன்னி லியோன் புதுவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருந்ததுதான் இந்த மகிழ்ச்சியான செய்தி. புதுவை பழைய துறைமுக வளாகத்தில் நேற்று முன்தினம் முதல் இன்று (1ம் தேதி) வரை 3 நாட்களுக்கு இசைநிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

டிக்கெட்களும் விற்று விட்டன
இதில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சன்னி லியோனை வரவேற்று புதுவையில் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. சன்னி லியோன் பங்கேற்பார் என்றதும் ஆயிரக்கணக்கான டிக்கெட்களும் விற்று விட்டன. ஆனால் தமிழர் களம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் சன்னி லியோன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

சன்னி லியோனின் பேனரை கிழித்தனர்
அவர்கள் பழைய துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சன்னி லியோனின் பேனரை கிழித்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெற்றது. இதில் 100-க்கும் குறைவான ரசிகர்களே பங்கேற்றனர். பாதுகாப்பு பலமாக இருந்தது. நிகழ்ச்சியின் இடையே சன்னி லியோன் வருவதாக அறிவிக்கப்பட்டு அவரும் இடையே வந்தார். ஆனால் சுமார் 2 மணி நேரம் மட்டுமே அவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

இளைஞர்களை ஏமாற்றிய சன்னி லியோன்
ரசிகர்கள் எதிர்பாத்தபடி சன்னி லியோன் அவர்களுடன் பேசி நடனமாடி உற்சாகப்படுத்தவில்லை.. தொடர்ந்து நடிகை சன்னி லியோன் இரவோடு, இரவாக புதுவையை விட்டு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. சன்னி லியோன் பங்கேற்பார் என்று நினைத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடும் எதிர்ப்பு காரணமாகவே சன்னி லியோன் நிகழ்ச்சியை ரத்து செய்ததாக கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications