2024 இல் அடுத்த பிரதமர் யார்? புதுவை மக்கள் சொன்னது யாரை தெரியுமா? தந்தி டிவி சர்வேயில் ட்விஸ்ட்!
புதுச்சேரி: புதுவையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமராக வர விரும்புகிறீர்கள் என கேட்ட கேள்விக்கு அந்த மாநில மக்கள் தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளார்கள்.
புதுவையில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி உள்ளது. யூனியன் பிரதேசமான இந்த புதுவையில் தந்தி டிவி மக்கள் யார் பக்கம் என்ற கருத்து கணிப்பை நடத்தின.

கடந்த மே 2023 ஆம் ஆண்டு முதல் பல தரப்பட்ட மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பிப்ரவரி மாதம் 2024 முடிவடைந்தது. அந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் தற்போது வெளியானது.
இந்த புதுவை மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன தெரியுமா?
அயோத்தி ராமர் கோயில் திறப்பு தேர்தலில் பலன் தரும் என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு இல்லை என 51 சதவீதம பேரும், ஆமாம் என 46 சதவீதம் பேரும் 3 பேர் கருத்து இல்லை என தெரிவித்துள்ளனர்.
அது போல் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதால் நீங்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுவீர்களா என கேட்டதற்கு 44 சதவீதம் பேர் ஆம் என்றும் 49 சதவீதம் பேர் இல்லை என்றும் 7 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அது போல் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமராக வர வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் ராகுல் காந்தி என்றும் 51 சதவீதம் பேர் நரேந்திர மோடி என்றும் பதில் அளித்துள்ளனர். அது போல் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பது பாஜகவா என்ற கேள்விக்கு 53 சதவீதம் பேர் ஆம் என்றும் 44 சதவீதம் பேர் இல்ல என்றும் 3 சதவீதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி மாதமே கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தாலும் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டாலும் அவர்களுடைய மனநிலையானது பாஜக கூட்டணிதான் வரும் தேர்தலில் மத்தியில் ஆட்சியில் அமரும் என்பதாகத்தான் உள்ளது. மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி இருப்பதாலும் புதுவை ஒரு யூனியன் பிரதேசமாக இருப்பதாலும் மத்தியிலும் பாஜக ஆட்சி அமைந்தால் அந்த யூனியன் பிரதேசத்திற்கு நிறைய நலத்திட்டங்கள் கிடைக்கும் என்பதுதான் அப்பகுதி மக்களின் எண்ணமாக இருக்கிறது.
புதுவை லோக்சபா தொகுதி என்பது 30 சட்டசபை தொகுதிகளை கொண்டது. இங்கு காங்கிரஸ் கட்சியே பெரும்பாலான லோக்சபா தேர்தல்களில் வென்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு கூட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வைத்திலிங்கம் எம்பியாக வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications