"துணை ஜனாதிபதி" பதவிக்கு கிரண்பேடி குறி.. தூக்கி எறிந்த பிரதமர்.. அடுத்து ஆர்.என்.ரவி.. மார்க்சிஸ்ட்
புதுச்சேரி: குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு செயல்பட்ட கிரண்பேடியை பிரதமர் மோடியும் அமித்ஷாவும் தூக்கி எறிந்ததுபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவர்களால் தூக்கி எறியப்படுவார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சிறப்பு மாநாடு கம்பன் கலையரங்கத்தில் நடந்தது. இதில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது இந்த விழாவில் ஜி ராமகிருஷ்ணன் பேசுகையில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை தமிழக பாஜக அலுவலமாக செயல்படுகிறது. துணை குடியரசுத் தலைவர் பதவி கிடைக்கும் என்பதால் புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக செயல்பட்டார்.
ஷாக்.. உறவினர் நிகழ்ச்சியில் பிரியாணி! அப்படியே மயங்கி சரிந்த பவானி! கணவன் எடுத்த விபரீத முடிவு!

பிரதமர் மோடி
அவரை பிரதமர் மோடியும் அமித்ஷாவும் பதவியிலிருந்து மாற்றிவிட்டனர். அதாவது வேலை முடிந்தவுடன் கிள்ளுக்கீரை போல் தூக்கி வீசப்பட்டார் கிரண்பேடி. தற்போது அவர் என்ன செய்கிறார் என தெரியவில்லை. அவர் இருக்கும் இடம் கூட தெரியவில்லை. எந்த நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடிவதில்லை.

தமிழக ஆளுநர்
இது போன்ற ஒரு நிலை ஒரு நாள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஏற்படும். அது போல் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு நடக்கும் என்றார். பின்னர் சீதாராம் யெச்சூரி பேசினார். அவர் பாஜக ஆட்சியில் உளள இடங்களில் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் செயல்படுத்துவதில்லை. மொழி பிரச்சினையில் இந்திதான் என மத்திய அரசு வலியுறுத்துகிறது.

தாய்மொழி
ஆனால் அந்தந்த மாநில அரசுகள் தாய்மொழிதான் வேண்டும் என வலியுறுத்து வருகிறார்கள். எந்த மாநிலத்தின் அரசையும் அழைத்து ஆலோசிக்காமல் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தவுள்ளது. இது பாஜகவின் பாசிசம் அல்லாமல் வேறு என்ன? இந்த புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்ப்போம் என்றார்.

ஆளுநர்கள்- அரசுகள் மோதல்
தமிழகம், கேரளம் ஆகிய தென் மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகத்தில் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. அது போல் கேரள அரசுக்கு எதிராக ஆளுநர் ஆரிப் முகமது கான் செயல்பட்டு வருகிறார். பல்கலைக்கழகங்களில் துணை வேந்தராக ஆளுங்கட்சி தரப்பு நியமனங்களுக்கு கேரள ஆளுநர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அது போல் தெலுங்கானா அரசுக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் இடையே கடும் மோதல் உள்ளது. தெலுங்கானாவில் ஆளுநருக்கு உரிய மரியாதையை தரவில்லை என தமிழிசை தெரிவிக்கிறார்.