புதுச்சேரியும், தமிழ்நாடும் ஒன்னு.. எங்க இருந்தாலும் ’நம்ம வகையறா’ தான்! உணர்ச்சி பொங்க பேசிய விஜய்!

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் தமிழ்நாடு, புதுச்சேரி என தனி தனியாக ஒன்றிய அரசு நினைத்தாலும் நாம் வேறு வேறு கிடையாது எனவும். வேறு வேறு ஊரில், வேறு வேறு வீட்டில் இருப்பதால் நாம் சொந்தம் இல்லை என்று கிடையாது என்று சொன்னதோடு, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி என எங்கு நம் வகையறா இருந்தாலும் நம் உயிர் தான்" என பேசி உள்ளார்.

கரூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த கூட்ட நெரிசல் விபத்து தமிழக அரசியலை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்போது ஏற்பட்ட கடுமையான நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் வேதனையை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வுக்கு பிறகு தவெக தலைவர் விஜய் ஒரு மாதத்திற்கும் மேல் எந்த பெரிய பொதுக்கூட்டங்களையும் நடத்தாமல் இருந்தார். அதன் பின்னர், காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளின் காரணமாக எந்தவித குழப்பமும் இல்லாமல் நடைபெற்றது.

TVK Vijay Puducherry Meeting

தமிழக வெற்றிக் கழகம்

இந்த அனுபவம் புதுச்சேரியில் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது என சொல்லலாம். இந்நிலையில், புதுச்சேரியில் உப்பளம் துறைமுக வளாகத்தில் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக அரசியல் கூட்டங்களுக்கு மேடை, தொண்டர்களுக்கான இருக்கைகள் போன்றவை அமைக்கப்படும். ஆனால் இந்த முறை எந்த மேடையும் அமைக்கப்படவில்லை. விஜய் தனது பிரச்சார வாகனத்தில் நின்றபடி உரையாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கரூரில் நடந்த துயர சம்பவத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கடுமையாக மேற்கொள்ளப்பட்டன.

தவெக பாதுகாப்பு ஏற்பாடுகள்

புதுச்சேரியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக சுமார் 5,000 நுழைவுச் சீட்டுகள் க்யூஆர் கோடு மூலம் தயாரிக்கப்பட்டு, அவை தவெக கிளைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதானோர், உடல் நலக்குறைவு உள்ளோர் போன்றோருக்கு இந்த நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் பகுதியை சுற்றி தற்காலிக நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அமைக்கப்பட்டன.

பலத்த பாதுகாப்பு

வாகனங்கள் திடலுக்குள் நுழையவோ, விஜயின் வாகனத்தை பின்தொடர்வதற்கோ அனுமதி இல்லை. மரங்கள், கட்டடங்கள், சுவர்கள் மற்றும் மின்கம்பங்கள் மீது ஏறுவது போன்றவை முற்றிலும் தடை செய்யப்பட்டன. காவல்துறை மற்றும் புதுச்சேரி நிர்வாகம் இணைந்து 2,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்களை களமிறக்கியிருந்தது.

தவெக விஜய்

காலை 10 மணியளவில் விஜயின் வாகனம் திடலுக்குள் வந்து சேர்ந்தது. அதிக கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்ட இந்த பொதுக்கூட்டம், கரூர் துயரத்திற்குப் பிறகு விஜய் கலந்து கொண்ட முதல் பெரிய நிகழ்ச்சி என்பதால், இயல்பாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் காலை 9 மணிக்கு புதுச்சேரி வந்த விஜய், காலை 10 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு வந்துவிட்டார். தொடர்ந்து 11.20 மணியளவில் விஜய் தனது பேச்சைத் தொடங்கினார்.

புதுச்சேரி விஜய் பேச்சு

நிகழ்ச்சியில் பேசிய விஜய்," ஒன்றிய அரசுதான் தமிழ்நாடு வேறு புதுச்சேரி வேறு என பிரித்துப் பிரித்துப் பார்க்கிறது. ஆனால் நாம் அனைவரும் ஒன்றுதான். எந்த ஊரில், எந்த வீட்டில் இருந்தாலும் நம் அனைவரும் ஒன்றுதான். ஒன்றிய அரசு போல தமிழ்நாடு, புதுச்சேரி என பிரித்துப் பார்க்க முடியாது. தமிழ்நாடு, புதுச்சேரி, மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா என உலகின் எந்த மூலையில் நம் வகையறாக்கள் இருந்தாலும் அனைவரும் நம் உயிர்தான். புதுச்சேரி என்றதும் மனக்குள விநாயகர் கோவிலில், மாதா கோவிலும் தான் நினைவுக்கு வரும். பாரதியார் வாழ்ந்த மண், பாரதிதாசன் பிறந்த மண். 1974-லேயே எம்ஜிஆர் வென்ற மண் இந்த. புதுச்சேரி தமிழ்நாட்டுக்கு முன்பே புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தவர் எம்ஜிஆர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+