புதுச்சேரியில் கலாட்டா ஆரம்பம்.. பதவியேற்ற உடனயே ரங்கசாமிக்கு ஷாக்.. 'துணை முதல்வர்' பதவி கேட்ட பாஜக

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்ற சிறிது நேரத்திலேயே துணை முதலமைச்சர் பதவி உள்பட 3 அமைச்சர்கள் பதவி பாஜகவுக்கு உள்ளது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளது கூட்டணி கட்சி வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில முதலமைச்சராக ரங்கசாமி இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பாஜக மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி பதவியேற்பு விழா முடிந்ததும் செய்தியார்களை சந்தித்தார்.

 Union Minister Kishan Reddy three ministers, including a deputy chief minister in puducherry

அப்போது அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர், அமைச்சரவை குறித்து கேள்வி எழுப்பியபோது என்.ஆர்.காங்கிரசுக்கு 3 அமைச்சர்களும், பாஜகவிற்பு 3 அமைச்சர்களும் இதில் துணை முதலமைச்சர் பதவியும் இடம் பெறும் என உறுதியாக கூறினார்.

மேலும் கூட்டணி பலமாக உள்ளது என்றும், ஓரிரு தினங்களில் அமைச்சரவை பதவியேற்கப்படும் என கூறினார். மேலும் மத்திய அரசு மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+