புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இன்றும் தொடரும் அவலம்" நீர்த்தேக்கத்தொட்டியில் மலம் கலந்த விவகாரம்.. பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியலினத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மனிதக் கழிவுகளை கொட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களோடு மக்களாக கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குற்றவாளிகளை உடனடியாக தமிழக அரசு கைது செய்ய வேண்டும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்தது மிகவும் கண்டனத்துக்குரியது. காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இனி நாங்கல்லாம் ஒன்னு! புதுக்கோட்டை விவகாரத்தில் உடன்பாடு! பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதி! இனி நாங்கல்லாம் ஒன்னு! புதுக்கோட்டை விவகாரத்தில் உடன்பாடு! பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதி!

தமிழகத்தில் தொடரும் அவலம்

தமிழகத்தில் தொடரும் அவலம்

இந்த சம்பவம் நடைபெற்று சிறிது நேரத்திலேயே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் களத்திற்கு சென்று ஆய்வு செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது பாராட்டுக்குரியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதி மறுப்பது, இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட இன்றும் நடைமுறையில் உள்ளது என்று தெரிவித்தார்.

 பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு

தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த கேள்விக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இல்லாமல் இருந்தது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசு தொகையுடன் முழு கரும்பும் கொடுப்பதற்கு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் கரும்பை கொள்முதல் செய்வதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதனை முழுமையாக படித்து ஆராய்ந்து கம்யூனிஸ்ட் கட்சி இந்த அறிவிப்பு குறித்து தெளிவுபடுத்தும் என்று தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்எஸ்எஸ் நிர்வாகி

ஆளுநர் ஆர்எஸ்எஸ் நிர்வாகி

தொடர்ந்து, தமிழக ஆளுநர் பற்றிய கேள்விக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநராக அவர் செயல்படவில்லை. ஆர்எஸ்எஸ் நிர்வாகியாக தான் செயல்பட்டு வருகிறார். தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி-க்கள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தனர். அதே கருத்தையே அரசியல் கட்சிகளும் வலியுறுத்துகின்றன என்று தெரிவித்தார்.

பாலகிருஷ்ணன் இரங்கல்

பாலகிருஷ்ணன் இரங்கல்

பின்னர் பிரதமர் தாயார் மறைவு குறித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. அதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களின் இரங்கல்களை பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.

ஆசிரியர்கள் போராட்டம்

ஆசிரியர்கள் போராட்டம்

பின்னர் ஆசிரியர்களின் போராட்டம் பற்றிய கேள்விக்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரச்சினை ஓராண்டுக்கு முன்பு வந்தது கிடையாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது. ஊதிய முரண்பாடு களைய வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிமுக அரசு நடவடிக்கை எடுக்காதன் விளைவு தான், இன்று வரை போராட்ட தொடர முக்கிய காரணம். தமிழக அரசு இந்த போராட்டங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

English summary
The incident of miscreants dumping human waste in an overhead water tank used by the people in Pudukottai district caused a great shock. The police are actively investigating the incident.In this situation, a protest demonstration was held on behalf of the Marxist Communist Party, condemning the affected people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X