ஸ்வீட், டிபன் பாக்ஸ், விசில்.. தீபாவளி பரிசு ரெடி.. விராலிமலை தொகுதி முழுக்க கொடுக்கும் விஜயபாஸ்கர்!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: விராலிமலை தொகுதி மக்களுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தீபாவளி பரிசு கொடுத்துள்ளார். ஒரு குலாம் ஜாமுன் பாக்ஸ், 2 டிபன் பாக்ஸ் மற்றும் ஒரு விசில் ஆகியவற்றை விநியோகம் செய்து வருகிறார். இதன் பையில் விஜயபாஸ்கரின் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. நவம்பர் மாத இறுதிக்குள் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின் உடனடியாக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Vijayabaskar Diwali By Election

ஏற்கனவே தவெக சார்பாக விராலிமலை உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன. முதல்வர் விஜய் விராலிமலை மற்றும் பெருந்துறை தொகுதிகளில் ரோடு ஷோ நடத்தி முடித்துவிட்டார். அதேபோல் தவெகவினரும் தொடர்ச்சியாக சுவர் விளம்பரங்கள், மாற்று கட்சியில் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விராலிமலை தொகுதியை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் வேட்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த நிலையில் விராலிமலை தொகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்திருக்கிறார். 2 டிபன் பாக்ஸ், ஒரு குலாப் ஜாமுன் பாக்ஸ் மற்றும் ஒரு விசில் அந்த பரிசுப் பையில் இருந்துள்ளது.

அந்த பையில் விஜய் புகைப்படம் இல்லாமல் விஜயபாஸ்கரின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அந்தப் பரிசுப் பையில் என்றும் மக்கள் பணியில் விஜயபாஸ்கர் என்ற வாசகமும் எழுதப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பொங்கல் பண்டிகையின் போது விஜயபாஸ்கர் இப்படியான ஒரு பரிசுப் பொருட்களை தொகுதி மக்களுக்கு வழங்கி இருந்தார்.

கட்சி பார்க்காமல் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் இந்த பரிசுப் பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். விஜயபாஸ்கர் மட்டுமல்லாமல் அமைச்சர் விக்னேஷ் தீபாவளியையொட்டி ஒரு ஸ்வீப் பாக்ஸ், புதிய காலெண்டர், ஒரு சட்டை துணி, பட்டாசு கிப்ட் பாக்ஸ் ஆகியவற்றை தனது தொகுதி மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+