"சார் Vijay Sir..!" புதுகையில் முதல்வர் விஜய்யை மேடையிலேயே தடுத்து நிறுத்திய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு விழாவை முடித்துக் கொண்டு கிளம்பிய முதல்வர் விஜய் யை கரூர் எம்பி ஜோதிமணி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு எழுந்தது. அவரும் அழைத்ததுமே நின்று என்ன? என கேட்டுவிட்டுதான் சென்றார்.

புதுக்கோட்டை ஆயுதப் படை மைதானத்தில் முதல்வர் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் திடீரென அங்கு ரத்து செய்துவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த விழா நடந்தது.

karur jothimani

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் காவல் துறை கட்டுப்பாட்டில் சென்றது. அங்கு பயனாளிகளும் பொதுமக்களும் செல்வதற்கான வழிகாட்டுதல்கள் முறையாக வழங்கப்பட்டன. சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை சென்றார்.

புதுக்கோட்டையில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் மேற்கொண்டுவிட்டு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார். நகரின் ரூ 23 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நவீன பஸ் நிலையத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். இதையடுத்து முதல்வர் விஜய், 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ 100 கோடிக்கும் அதிகமான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதையடுத்து 8 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்தும் புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

விஜய்யை தடுத்து நிறுத்திய ஜோதிமணி

இந்த நிலையில் ஆட்சியரகத்தில் நடந்த விழாவை முடித்துக் கொண்டு விஜய் வணக்கம் சொல்லிவிட்டு கிளம்பிய போது, திடீரென "சார் விஜய் சார்.. " என ஒரு குரல் கேட்டதும் அவர் திரும்பி பார்த்தார். அவரை அழைத்தது கரூர் எம்பி ஜோதிமணி! அருகே சென்ற போது அவர் ஒரு பேப்பரை காட்டி மிகவும் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தார். விஜய்யும் அதை கேட்டுக் கொண்டிருந்தார். விஜய்யை திடீரென ஜோதிமணி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் போக்குவரத்து உள்கட்டமைப்பு, விளையாட்டு மேம்பாடு, பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான முக்கிய கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய்யிடம் வழங்கினேன்.

போக்குவரத்து நெரிசல்

• கரூர் சுற்றுவட்டச் சாலை: கரூர் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்கள் மற்றும் சரக்கு வாகனங்களின் பயணத்தை எளிதாக்கவும் ரூ.72.83 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரூர் சுற்றுவட்டச் சாலைத் திட்டத்தின் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்தல்.

விளையாட்டு உள்கட்டமைப்பு

• விளையாட்டு உட்கட்டமைப்பு: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்குப் போதிய பயிற்சி வசதிகள் இல்லாத நிலையில், கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 40 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் மற்றும் 10 மீட்டர் உயரம் கொண்ட நவீன ஜூடோ உள்விளையாட்டு அரங்கம் அமைத்தல். மேலும், விராலிமலையில் 40 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் மற்றும் 10 மீட்டர் உயரம் கொண்ட நவீன உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தல்.

பொழுதுபோக்கு பூங்கா

• உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்குப் பூங்கா: கரூர் மாநகரில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், நடைபயிற்சிப் பாதைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், பசுமையான திறந்தவெளிப் பகுதிகள் மற்றும் பாதுகாப்பான பொழுதுபோக்கு வசதிகளுடன் உலகத் தரம் வாய்ந்த பொதுப் பூங்கா அமைத்தல்.

வாங்கல் சாலை

• வாங்கல் சாலை குப்பைக் கிடங்கு: கரூர் மாநகராட்சிக்குச் சொந்தமான வாங்கல் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கில் பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ள சுமார் 40,000 மெட்ரிக் டன் குப்பைகளையும் உயிரி அகழ்வு (Bio Mining) முறையில் அகற்றி, அப்பகுதி மக்களின் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்தல். மேலும், எதிர்காலத்தில் குப்பைகள் தேங்குவதைத் தவிர்க்க அறிவியல் முறையிலான திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துதல்.

நீண்ட கால கோரிக்கை

பொதுமக்களின் நீண்டகாலத் தேவைகளையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும், கரூர் மாநகரின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, இக்கோரிக்கைகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+