எனக்கு அப்பா, அம்மா எல்லாமே விஜய் அண்ணன்தான்.. லியோ ஆன்ஸ்கிரீனில் திருமணம் செய்த ரசிகர் உருக்கம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள தியேட்டரில் லியோ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி வெளியான இன்று தியேட்டரில் இருந்தபடியே காதல் ஜோடி திருமணத்தை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது லியோ திரைப்படம். இந்த படத்தில் திரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்றைய தினம் காலை 9 மணிக்கு இந்த படம் ரிலீஸானது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் லியோ திரைப்படம் இன்று வெளியானது.
ஆந்திராவில் காலை 5 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. லியோ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கொண்டாடி வருகிறார்கள். மேலும் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடத்தியும் வருகிறார்கள்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் காதல் ஜோடி ஒன்று தங்கள் திருமணத்தை நிச்சயித்துக் கொண்டுள்ளது. புதுக்கோட்டையில் ஒரு தியேட்டரில் லியோ திரைப்படத்தின் போது காதல் ஜோடி மோதிரம் மாற்றிக் கொண்டு தங்களது திருமணத்தை செய்து கொண்டனர்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் கைதட்டி கொண்டாடி அந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மணமகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் நான் 20 ஆண்டுகளாக விஜய் ரசிகராக உள்ளேன். எனக்கு விஜய் அண்ணன் கையால் தாலி எடுத்து கொடுத்து கட்ட வேண்டும் என்ற ஆசை. ஆனால் என்னால் அவ்வளவு செலவு எல்லாம் செய்ய முடியாது.
எனது விருப்பத்தை மாவட்டத் தலைவர் உதய சத்யா அண்ணன் கிட்டயும் பர்வேஷ் அண்ணன்கிட்டயும் சொன்னேன். அப்போது அவர்கள் செய்துவிடலாம். முதலில் ஆன் ஸ்கிரீனில் திருமணம் செய்து கொள்ளுங்கள் பிறகு , தளபதியிடம் அழைத்துச் செல்கிறோம் என்றனர்.
இதையடுத்து அந்த இரு அண்ணன்கள்தான் எங்களுக்கு மோதிரம் , மாலை, உடை எல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள். விஜய் திரையில் தோன்றும் போது திருமணம் செய்து கொண்டோம். நாளை எங்கள் குடும்ப முறைப்படி வரதராஜ பெருமாள் கோயிலில் திருமணம் செய்து கொள்கிறோம். தியேட்டரில் திருமணம் செய்து கொள்ள என் மனைவியை நான் கட்டாயப்படுத்தவில்லை.
அவர் சம்மதத்துடன்தான் இந்த திருமணம் நடந்தது. எனக்கு அப்பா, அம்மா இல்லை, அண்ணன் விஜய்தான் எனக்கு எல்லாமே, அவர் படத்தை பார்த்து கெட்டு போவார்கள் என்கிறார்கள். ஆனால் அவர் படத்தை பார்த்துதான் நான் நல்லபடியாக இருக்கிறேன். நான் பிஏ படித்துள்ளேன். என் மனைவி எம்ஏ படித்துள்ளார். விஜய் அண்ணன் ஆட்சிக்கு வந்தால் எங்களை போன்ற இளைஞர்களுக்கு நன்றாக இருக்கும். இவ்வாறு அந்த புதுமண தம்பதி தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications