புதுக்கோட்டை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பாஜக வாக்கு கொஞ்சம் அதிகரித்துள்ளது! காங்கிரஸில் இருந்து வந்த குரல்..சொன்னவர் இவர் தான்

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் எம்பி பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.

திருச்சி எம்பியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் குன்னாண்டார் கோவிலில் நடந்த இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் வார விழாவை துவக்கிவைத்தார்.

அதன்பிறகு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்களின் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். இதையடுத்து திருநாவுக்கரசர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

ஒற்றை செருப்பு.. வாயில் கவ்விச்சென்ற பாம்பு..காலே இல்லையே செருப்பு எதுக்கு நெட்டிசன்ஸ் கமெண்ட்ஒற்றை செருப்பு.. வாயில் கவ்விச்சென்ற பாம்பு..காலே இல்லையே செருப்பு எதுக்கு நெட்டிசன்ஸ் கமெண்ட்

திருநாவுக்கரசர் எம்பி பேட்டி

திருநாவுக்கரசர் எம்பி பேட்டி

இந்த வேளையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மோதிக்கொண்டது பற்றியும், தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடு குறித்து ஆளுநரை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியது பற்றியும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இதுதொடர்பாக திருநாவுக்கரசர் எம்பி கூறியதாவது:

பாஜக வளர்ச்சியடைந்துள்ளதா?

பாஜக வளர்ச்சியடைந்துள்ளதா?

பாஜக கடந்த கால வாக்கு சதவிகிதத்தை விட தற்போது அரை சதவீதம் அல்லது ஒரு சதவீதம் வளர்ந்து இருக்கலாம். ஆனால் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு பாஜக தமிழகத்தில் இன்னும் வளரவில்லை. திமுக ,அதிமுக போன்று தமிழகத்தில் பாஜக வளரவில்லை. தமிழகத்தில் பாஜக வளர்வதற்கான வாய்ப்புகளும் கிடையாது. மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பதால் பணபலம் உள்ளிட்டவைகளை வைத்துக்கொண்டு ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகின்றனர்.

எதிர்க்கட்சியின் பணி

எதிர்க்கட்சியின் பணி

ஆளுங்கட்சியின் தவறை கண்டுபிடித்து குற்றம் கூறுவது தான் எதிர்க்கட்சியின் வேலை. அது போன்று தான் அதிமுக தற்போது திமுக தவறு செய்வதாக குற்றம்சாட்டி ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். திமுக அரசில் குற்றம் நடந்துள்ளதா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். குறைகள் இருந்தால் திருத்திக் கொள்ள தான் வேண்டும். யார் ஆட்சியில் இருந்தாலும் ஒரு சில குறைகள் நடக்கத்தான் செய்யும். அதை வைத்துக்கொண்டு தமிழக முழுவதும் இப்படி தான் நடந்து வருகிறது என்று எடுத்துக்கொள்ள முடியாது

விசாரணை நடத்தி நடவடிக்கை

விசாரணை நடத்தி நடவடிக்கை

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகளை தமிழ்நாடு சட்டசபையின் பொது கணக்கு குழு கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மெடிக்கல் கவுன்சில் தேர்தல் வெளிப்படை தன்மையோடு நேர்மையாக நடக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது'' என்றார்.

English summary
Congress MP Thirunavukkarasar MP has made a sensational comment that BJP's vote percentage has increased slightly in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X