முதல்வர் விஜய் திறந்து வைத்த புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் என்ன வசதிகள்?

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், புதுக்கோட்டை சத்யமூர்த்தி சாலைல் 23 கோடியே 25 லட்சம் செலவில் புனரமைத்து கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலைத்தை இன்று திறந்து வைத்துள்ளார். இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான குடிநீர், நவீன கழிப்பறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் காத்திருப்பு அறைகள், பார்க்கிங் வசதி போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகரில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக பேருந்து நிலையம் கட்டப்பட்டிருந்தது. அது முற்றிலும் பழுதடைந்ததால், பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி புதுக்கோட்டை சத்யமூர்த்தி சாலையில் கடந்த 2024-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் புதிய பேருந்து நிலைத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பணிகள் தொடர்ந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. குடிநீர், கழிப்பறைகள், காத்திருப்பு அறைகள், கடைகள், உணவகங்கள், பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளையுயும் பயணிகளுக்கும் வழங்கும் வகையில் கட்டுமான பணிகள் நடைபெறற்று வந்தன. தற்போது பணிகள் முடிக்கப்பட்டு பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

What facilities are available at the Pudukkottai bus stand inaugurated by Chief Minister Vijay

முதல்வர் ஜோசப் விஜய் இன்று பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள குடிநீர், கழிப்பறை வசதிகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, காத்திருப்பு அறைகள் உள்ளிட்ட உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். இந்த திறப்பு விழாவின்போது அமைச்சர்கள் ஆனந்த், பர்வேஸ், எம்.பி.க்கள் துரை வைகோ, நவாஸ்கனி, ஜோதிமணி உள்ளிட்டோர் உடனிருந்தார்கள்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் சுமார் 4.96 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கிறது. தரைத்தளக் கட்டடப் பரப்பளவு 3,720 சதுர மீட்டர் ஆக இருக்கிறது. முதல் தளக் கட்டடப் பரப்பளவு 1,740 சதுர மீட்டர் ஆகவும் இருக்கிறது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 60 பேருந்துகளை நிறுத்தி வைக்கும் வசதிகள் உள்ளன. 70 வணிக கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு உணவகங்கள் தற்போது உள்ளன. குளிரூட்டப்பட்ட வசதியுடன் பயணிகள் காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆண்கள் கழிவறைகள் 4, பெண்கள் கழிவறைகள் 4, தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் 2, நேரக் காப்பாளர் அறை, நிர்வாக அறை, காவலர் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, மின்சார அறை போன்றவை உள்ளது. புதுக்கோட்டை பேருந்து நிலைத்தில் விரைவில் ஏடிஎம்களும் அமைக்கப்பட உள்ளன.

ஏற்கனவே இருந்த பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு தான் புதிய பேருந்துநிலையம் அமைக்கப்பட்டது என்பதால், முன்னதாக குப் பேருந்து சேவை பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, ருந்து நிலையத்துக்குப் பின்னால் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையின் ஒரு பகுதியில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைத்து, அங்கிருந்து பேருந்துகள் சென்று வந்தன. தற்போது புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதால், வழக்கம் போல் பேருந்துகள் செல்ல தொடங்கி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+