கொரோனா பாதிப்பு.. தீவிர சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி ராஜீவ் சாதவ் காலமானார்

Subscribe to Oneindia Tamil

புனே: கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த எம்.பி. ராஜீவ் சாதவ் இன்று புனேவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா எம்பி ராஜிவ் சாதவ். புனேவை சேர்ந்த இவர் மகாஷ்டிராவில் இருந்து காங்கிரஸ் சார்பாக ராஜ்ய சபாவிற்கு தேர்வானார். கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

முதலில் அறிகுறிகள் லேசாக இருந்த நிலையில் போக போக இவரின் உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து புனேவில் உள்ள ஜகாங்கீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Congress MP Rajiv Satav scummed to death due to Covid 19 in Pune

இந்த நிலையில் இன்று இவரின் உடல்நிலை மோசமான நிலையில், சிகிச்சை பலனின்றி காலை 9.30 மணி அளவில் மரணம் அடைந்தார். எம்பி ராஜிவ் சாதவ் மகாராஷ்டிராவில் காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார்.

முக்கியமாக விதர்பா மண்டலத்தில் இவர் வலுவான தலைவராக பார்க்கப்பட்டார். இவரின் இழப்பு காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

எம்பி ராகுல் காந்தி இரங்கல்:

இது தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி, என் நண்பர் ராஜீவ் சாதவின் இழப்பு வருத்தம் அளிக்கிறது. அதிக ஆற்றல் கொண்ட, காங்கிரஸ் கொள்கைகளுடன் பிணைந்த அரசியல் தலைவர் ராஜீவ் சாதவ். இவரின் மறைவு நமக்கு பெரிய இழப்பு. அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+