38 வயதில் 17 வது குழந்தையை பெற்றெடுத்த பெண்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி
புனே: மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் 38 வயதாகும் ஒரு பெண்ணுக்கு 17வது முறையாக பிரசவம் நடந்த சம்பவம் சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த மாஜல்காவ் தாலுகாவைச் சேர்ந்தவர் மாவோஜி. இவரது மனைவி லிங்காபாய் வயது 38. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர்களுக்கு 9 மகள்கள் உள்பட 11 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்யும் லிங்காபாய் மற்றும் மாவோஜி தம்பதி தங்கள் மாவட்ட எல்லையை ஒட்டிய கர்நாடகா பகுதியில் கரும்பு தோட்ட வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் லிங்காபாய்க்கு மூன்று முறை கரு கலைந்துள்ளது. ஐந்து குழந்தைகள் பிறந்த உடன்இறந்துவிட்டன. தற்போது 20வது முறையாக கர்ப்பம் தரித்திருக்கிறார்.
கர்நாடகா மாநிலம் பெல்காமுக்கு சமீபத்தில் கரும்பு தோட்ட வேலைக்காக லிங்காபாய் மற்றும் மாவோஜி தம்பதி குழந்தைகளுடன் சென்று வேலை செய்திருக்கிறார்கள் இந்நிலையில் கரும்பு தோட்டத்திலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சில மணி நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டது.
38வயதாகும் லிங்காபாய் 17 முறை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த பெண்ணுக்கு கருத்தடை செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications