புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா மர்மத்துக்கு விடை? குழந்தைகளும் இடம் பெறும் செகண்ட் செரோ-சர்வே.. ஐசிஎம்ஆர் செம்ம பிளான்!

Google Oneindia Tamil News

புனே: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தனது இரண்டாவது செரோ-கண்காணிப்பு ஆய்வை 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை உள்ளடக்கும் வகையில் அமைத்துள்ளது. ஐசிஎம்ஆர் அமைத்த முதல் செரோ-கண்காணிப்பு ஆய்வு குழு மூலம், ரத்தத்தில் கோவிட் -19 ஆன்டிபாடிகள் உள்ளவர்களை தேடியது. பெரியவர்கள் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மீது மட்டுமே கவனம் செலுத்தியது.

ஆனால் தற்போது ஆராய்ச்சியாளர்கள் நடத்த போகும் இரண்டாவது செரோ-கணக்கெடுப்பில் 10 வயதுக்கு மேற்பட்டவர்களை உள்ளடக்கி நடத்தப்பட உள்ளது. முதல் ஆய்வை போலவே நாட்டின் அதே 71 மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது.

சென்ற தடவை நடத்தப்பட்டது போலவே 26,400 நபர்களின் மாதிரிகள் சோதிக்க உள்ளது. இந்த தகவலை ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானி டாக்டர் ரஜ்னி காந்த் கூறினார்.

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி... 50 நாளில் குறையும் அபாயம்... புதிய ஆய்வில் தகவல்!! கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி... 50 நாளில் குறையும் அபாயம்... புதிய ஆய்வில் தகவல்!!

என்ன ரிசல்ட்

என்ன ரிசல்ட்

பெரும்பாலான மாவட்டங்களில் தொடங்கியுள்ள இந்த கணக்கெடுப்பை அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் முடிக்க வேண்டும். முடிவுகளின் பகுப்பாய்வு அடுத்த மாதம் இறுதியில் முடிவடையும் என்றார்

0.73% மக்கள் மட்டுமே பாதிப்பு

0.73% மக்கள் மட்டுமே பாதிப்பு

முதல் செரோ-கணக்கெடுப்பின் ஆரம்ப கண்டுபிடிப்புகளில், இந்தியாவில் 0.73% மக்கள் மட்டுமே புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் இந்த முதல் கணக்கெடுப்பு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்டது. இப்போது இரண்டாம் கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதுவரை பின்பற்றப்பட்ட நோய் கட்டுப்பாட்டு முறைகள் செயல்பட்டனவா என்பது குறித்து இந்த சோதனையில் ஆய்வு செய்யப்பட உள்ளது. இப்போது எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விகிதமும் ஆய்வில் தெரியவரும்.

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி

இந்த செரோ-ஆய்வுகள் ஏன் செய்யப்படுகிது என்றால், அறிகுறியற்ற நபர்கள் எத்தனை பேர், மற்றும் கொரோனா( SARS-Cov-2 ) நோய்த்தொற்றுக்கு உள்ளான மக்கள்தொகையின் விகிதத்தை தீர்மானிக்கவும் நிச்சயம் உதவும் என்று ஐசிஎம்ஆர் நிபுணர்கள் தெரிவித்தனர். இரண்டாவது ஆய்வின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்த ஐசிஎம்ஆர் நிபுணர்கள், சமூகத்தில் எத்தனை சதவீதம் பேருக்கு கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகி உள்ளது என்பதை அறியவும், சாத்தியமான மந்தை நோய் எதிர்ப்பு சக்திக்கு (herd immunity.) நாடு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது என்பதையும் மதிப்பீடு செய்ய முடியும் என்கிறார்கள்.

சவாலான ஆய்வு

சவாலான ஆய்வு

பொது சுகாதார அறக்கட்டளையின் பேராசிரியர் கிரிதர் பாபு, கூறும் போது, அனைத்து வயதினருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும் செரோ-கணக்கெடுப்புகளை நடத்துவது முக்கியம் . ஆனால் இதுபோன்ற ஆய்வுகள் இன்னும் பெரியவர்கள் அல்லாதவர்களுக்கு நடத்துவது என்பது நெறிமுறை ரீதியாக சவாலானவை. ஏனெனில் இது நெறிமுறையாக சிக்கலானது என்பதால், பெரும்பாலான ஆய்வுகளில் குழந்தைகளிடமிருந்து நீங்கள் உண்மையில் முடிவுகளைப் பார்க்க முடியாது .. எனினும் குழந்தைகளிடையே நோய்த்தொற்று பரவல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை தீர்மானிக்கவும், பள்ளிகளை எப்போது, எங்கு திறக்க வேண்டும் என்பதை அரசாங்கங்கள் தீர்மானிக்க இந்த ஆய்வு உதவும் என்று அவர் கூறினார்.

English summary
The Indian Council of Medical Research (ICMR), in its second sero-surveillance study, is set to also cover children aged 10 and above. The agency’s first sero-surveillance study, which looks for people with Covid-19 antibodies in their blood, had focused only on adults (those above 18).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X