புனே அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஷ்யாவின் "ஸ்புட்னிக் வி" கொரோனா தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனம் ஒப்பந்தம்.. பற்றாக்குறை தீருமா?

Google Oneindia Tamil News

புனே: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசியை செப்டம்பர் மாதம் முதல் தயாரிக்க உள்ளது.

ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசியையும் இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

Serum Institute going to make Sputnik V, which will begin production in September

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "புனேவில் உள்ள இந்திய சீரம் மையத்தில் செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 30 கோடி தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பரிமாற்ற செயல்முறையின் ஒரு பகுதியாக சீரம் ஏற்கனவே செல் மற்றும் பிற தொழில்நுட்ப மாதிரிகளைப் பெற்றுள்ளது என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதி கொண்ட அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் தடுப்பூசி இபபோது போதிய அளவுக்கு இருப்பு இல்லை. இந்த நிலையில் சீரம் நிறுவனம் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்க அனுமதி பெற்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் நிபுணர் குழு தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா இதுபற்றி கூறுகையில், இந்த தடுப்பூசி தயாரிப்பு அனுமதியால் இந்தியா டிசம்பர் மாதத்திற்குள் தன்னிறைவு பெறும் என்று கூறியுள்ளார்.

இதுவரை, ரஷ்ய ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு உலகளவில் 67 நாடுகளில் அனுமதி கிடைத்துள்ளது. 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்று கூரப்படுகிறது.

அர்ஜென்டினா, செர்பியா, பஹ்ரைன், ஹங்கேரி, மெக்ஸிகோ, சான் மரினோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பல நாடுகள் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்துகின்றன.

English summary
The Serum Institute of India (SII) is set to produce the Sputnik V-Corona virus vaccine in September. The Sputnik V corona vaccine has been approved for emergency use in India. It is in this context that Serum is set to launch the Sputnik V vaccine in September. The company also manufactures the Covshield vaccine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X