"அதுக்கு" மட்டும் ஓகே.. தாலி கட்ட மறுப்பு.. கட்டாயக் கல்யாணம்.. கட்டிய வேகத்தில் தப்பி ஓடிய மணமகன்!

கட்டாய திருமணம் செய்த இளைஞர் தப்பி ஓடியதால் அவரை தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

புனே: அந்த பெண்ணுடன் உடலுறவு கொள்ள மட்டும் பிடித்துள்ளது.. ஆனால் கல்யாணம் செய்ய விருப்பமே இல்லை.. எனவே கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைத்தால், கொஞ்ச நேரத்திலேயே மணமகன் தப்பி ஓடிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புனேவில், சகான் பகுதியை சேர்ந்த இளைஞர் சுராஜ் நளவாடே. இவர் அந்தப் பகுதியில் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் உடலுறவு கொள்ள காதலியை வற்புறுத்தி உள்ளார். ஆனால், கல்யாணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். அதனால் போலீசில் இளம் பெண் புகார் கொடுக்க, சுராஜ் தலைமறைவாகி விட்டார்.

young man escaped after forced marriage near pune

இதற்கு அந்த இளைஞர் சொன்ன காரணம், "​​நான் தாழ்ந்த சாதியை சேர்ந்தவன்.. நான் உனக்கு செட் ஆக மாட்டேன்" என்று சொல்லி மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த பெண் , வாழ்ந்தால் உன்னோடுதான், இல்லையென்றால் சாவதே மேல் என்று சொல்லி, பெண் தற்கொலைக்கும் முயன்று இருக்கிறார்.

இதனால் பதறிப் போன அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் பெண்ணை மீட்டு புனேவில் உள்ள சக்காம் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஆபத்தான நிலைமையில் இருந்த அந்த பெண்ணை தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.. அபாய கட்டத்தை அவர் தாண்டியதுமே, இந்த இளைஞரை தேடி பிடித்து இழுத்து கொண்டு வந்து, அப்பெண்ணுக்கு ஆஸ்பத்திரியிலேயே கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.

ஒரு பக்கம் ஊசி, மறுபக்கம் மூக்கில் டியூப்பு என்று ஐசியூவில் சிகிச்சையில் இருந்த பெண்ணுக்கு தாலி கட்டினார் இளைஞர்.. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே மாப்பிள்ளை திரும்பவும் எஸ்கேப் ஆகி விட்டார். எங்கே தப்பி ஓடிவிட்டார் என்றே தெரியவில்லை.

இதனால் சம்பந்தப்பட்ட பெண் திரும்பவும், இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்க, பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அந்த மாப்பிள்ளையை மீண்டும் தேடிவருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. இப்படியா கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்வது என்று பலரும் இந்த சம்பவத்தை விமர்சித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+