அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுக்கும் அன்வர்ராஜா... வார்த்தைக்கு வார்த்தை 'சின்னம்மா' புகழ்..!
ராமநாதபுரம்: சசிகலா குறித்து அதிமுக முன்னாள் எம்.பி.அன்வர் ராஜா அளிக்கும் அனைத்து பேட்டிகளிலும் அவரை சின்னம்மா என்றே அழைக்கத் தொடங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சசிகலாவின் விடுதலைக்கு பிறகு அரசியலில் தாக்கம் இருக்கும் என்றும் அவர் கூறி வருகிறார்.
அதிமுகவின் அவைத்தலைவர் பொறுப்புக்கு அன்வர்ராஜா பெயர் பரிசீலனை செய்யப்படும் சூழலில் அவர் சின்னம்மா புகழ்பாடி வருவது கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

அன்வர் ராஜா
ராமநாதபுரம் மாவட்டத்தின் அதிமுக முகமாக பார்க்கப்படுவர் அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர். காலத்து சீனியரான இவர் மனதில் தோன்றியதை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். ஆகியோரிடம் நேரடியாக பேசக்கூடியவர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசை சபிக்கும் வகையில் பேசி தேசிய தலைவர்களின் கவனத்தை ஈர்த்தார். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவரை தவிர யாருக்கும் கட்டுப்படாதவர்.

சின்னம்மா புராணம்
இந்நிலையில் அண்மைக்காலமாக சசிகலா புராணம் பாட ஆரம்பித்திருக்கிறார் அன்வர் ராஜா. அதுவும் சசிகலாவை அவரை பெயரைச் சொல்லி அழைக்காமல் சின்னம்மா என்ற அடைமொழியிட்டு அவர் விளிப்பது தான் அதிமுக தலைமையின் புருவம் உயர்த்த வைத்துள்ளது. பரமக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூட சின்னம்மா என்றே குறிப்பிட்டார் அன்வர் ராஜா.

அதிருப்தி வெளிப்பாடு?
அதிமுக சார்பில் ராஜ்யசபா சீட் எதிர்பார்த்த அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது முதல் அவர் மன வருத்தத்தில் இருந்து வருவதாகவும் இருப்பினும் அதனை அவர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் கட்சிப் பணிகளில் வழக்கம் போல் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு வக்பு வாரிய நிர்வாக அமைப்பு முறையில் ஆட்சி மேலிடம் தனக்கு சிறப்பு பதவி வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் கானல் நீராகிவிட்டது.

சட்டமன்றத் தேர்தல்
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் சசிகலா விடுதலையாக இருப்பது அதிமுக தலைமைக்கு ஏற்கனவே தலைவலியாக உள்ள நிலையில் அன்வர் ராஜா போன்ற ஒரு சில நிர்வாகிகள் மீண்டும் சின்னம்மா புகழ் பாடத் தொடங்கியிருப்பது கூடுதல் பிரச்சனையை கொடுக்கிறது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications