நாட்டிற்காக ராஜினாமா செய்கிறேன்.. வீடியோ வெளியிட்ட காவலர்.. அடுத்து செய்தது தான் ட்விஸ்ட்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேசனில் தலைமை காவலராக பணியாற்றி வந்த கார்த்திக், வேலையை ராஜினாமா செய்வதாகக் கூறி , சுதந்திர தினத்தன்று வீடியோ வெளியிட்ட நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
காவல்துறையில் பணியாற்றிக் கொண்டு சமூகத்தில் நடக்கும் விஷயங்களை பேச முடியாத நிலை இருப்பதாகவும், அண்ணாமலையின் கீழ் பாஜகவில் என்னை இணைத்துக் கொண்டு பணியாற்ற போவதாகவும் கூறினார். இதன்படியே கார்த்திக் பாஜகவில் இணைந்துவிட்டார்.

தமிழகம் முழுவதும் இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்ற கார்த்திக் என்ற முதல்நிலை காவலர், ராமநாதபுரம், கேணிக்கரை போலீஸ ஸ்டேசனில் பணியாற்றி வந்தார். இந்நிலையில கார்த்திகேயன் தனது வேலையை ராஜினாமா செய்வதாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை திடீரென வெளியிட்டார்.
"இந்த தேசத்தில் வாழும் அனைத்து உயர் சொந்தங்களுக்கும் எனது காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது பெயர் வே.கார்த்திக், முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறேன். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறேன். இந்த தேச திருநாட்டில் சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் ஆகியும், இன்றும் சுதந்திரம் இல்லாமல், தேசத்தில் இந்த சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த தேசத்திற்காகவும், இந்த சமூகத்திற்காகவும் நான் புனிதமாய் நேசிக்கும் எனது காவல் பணியை, இந்நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 2023ஐ அன்று, இந்த சமூகத்திற்கும்,இந்த சமுகத்தின் மக்களுக்காகவும் ராஜினாமா செய்கிறேன்.ஜெய்ஹிந்த்" இவ்வாறு கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ராஜினாமா செய்த நிலையில், உடனடியாக பாஜகவில் இணைந்துள்ளார். அண்ணாமலை தான் அடுத்த முதலமைச்சர் என்றும் கார்த்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வரப்போகிறது. முதலமைச்சராக வரப்போகிறவர் அண்ணாமலை தான்.. இதுதான் என்னுடைய கணிப்பு. நான் அவரது தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளேன்.
காவலர் பணியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்த ஏட்டு #annamalai #bjp #Ramanathapuram #police #IndependenceDay2023 pic.twitter.com/xKiD3eUhBo
— velmurugan (@velmurugantheni) August 16, 2023
ஒரு மாவட்டத்துக்கு எஸ்பி இருந்தால் போலீஸ் வேண்டும் அல்லவா? அதுபோல் தான் எஸ்பி இருக்கிறார். நான் போலீஸ் எனவே சேர்ந்துள்ளேன். போலீசாக இருந்த நான், எல்லா மக்களையும் சந்தித்து, எல்லா மக்களுக்கும் என்ன குறை, என்பது குறித்து ஆய்வு செய்து அண்ணாமலையிடம் சமர்பிப்பேன்.. அந்த ஆய்வினை சமர்பித்த பின்னர், அண்ணாமலை தான் முதலமைச்சராக வரப்போகிறார்.. இது நடக்க போகிறது.. இதற்காகத்தான் என்னுடைய காவல் பணியை நான் ராஜினாமா செய்தேன்.
என் குடும்பத்தினர் காவலர் வேலையை விடுவதற்காக வருத்தப்பட்டார்கள். கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும். என்னுடைய செயல்பாடு மூலம் நான் உயர்ந்த நிலைக்கு போய்விட்டால் பின்னால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். நான் காவல்பணியை நேசித்து செய்தேன்.மனஅழுத்தம் காரணமாக எல்லாம் ராஜினாமா செய்யவில்லை. காவலர் என்ற கட்டுக்குள் இருந்தால் என்னுடைய லட்சியத்தை இலக்கை நோக்கி போக முடியாது. அதனால் தான் ராஜினாமா செய்தேன்" இவ்வாறு கூறினார்.
-
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications