ஸ்டாலின் தான் வர்றாரு..மல்லுக்கட்டும் உடன்பிறப்புகள்! களைகட்டிய இராமநாதபுரம் திமுக!தயாரான பட்டியல்?
இராமநாதபுரம் : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டதால் அவர் தரப்பு நிர்வாகிகள் சோர்ந்து போயுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் வருகையால் உடன்பிறப்புகள் உற்சாகமடைந்தாலும் 'கோஷ்டி' மோதலும் ஒருங்கே களைகட்டியுள்ளது.
அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், விழாவுக்கு 4 நாட்களுக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்ல மாட்டார் என்ற அறிவிப்பு இராமநாதபுரம் மாவட்ட அதிமுக மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள முக்குலத்து நிர்வாகிகளிடையே கடுமையான கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
அதே நேரத்தில் பசும்பொன்னில் நடைபெறும் குருபூஜை விழாவில் பங்கேற்க வருகை தரும் தலைவர்களை வரவேற்கும் சுவர் விளம்பரங்களால் ராமநாதபுரம், மாவட்டம் களைகட்டி உள்ளது. இந்த முறை அதிமுகவினர் மட்டுமல்ல திமுகவினரும் இரு பிரிவுகளாகப் பிரிந்து வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி வருகை இல்லாததால் அதிமுகவினர் மிகவும் சோர்ந்து போய் உள்ளனர். அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பினர் அவரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனால் அதிமுக உட்கட்சி அரசியல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சமூக அரசியலும் சேர்ந்து கொள்ள பரபரப்பாகியிருக்கிறது பசும்பொன். ப்ளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்கள், வாழை மரம், தோரணங்கள், கட்சி கொடிகள் என இபிஎஸ் தரப்பை வெறுப்பேற்றும் வகையில் அதிமுக ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் சோர்ந்து போன நிலையில் முதல்வர் ஸ்டாலின் வருகை திமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த உற்சாகத்தின் ஊடாக உடன்பிறப்புகள் இரண்டு அணிகளாக பிரிந்து மோதிக்கொள்வதும் அரங்கேறியிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் தனி அணியாகவும், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆதரவாளர்கள் தனி அணியாகவும் உள்ளனர். மாவட்ட செயலாளர் தேர்வுக்கு பின்னரும் இரு அணிகள் இணைப்பின்றியே இருந்து வருகிறது.

உடன்பிறப்புகள் மோதல்
இந்நிலையில் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். அவரை வரவேற்று சுவர் விளம்பரங்கள் செய்வதில் அமைச்சர் - மாவட்டம் தரவாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்களால் எழுதப்படும் சுவர் விளம்பரங்களில் முதல்வரின் பெயருடன் ராஜகண்ணப்பனின் பெயரும் பிரதானமாக இடம்பிடித்துள்ளது. அதே நேரத்தில் மாவட்ட செயலாளர் தரப்பில் எழுதப்படும் சுவர் விளம்பரங்களில் 'முகவை மாவட்ட திமுக என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரங்கள்
இத்தகைய விளம்பரங்களை எழுதுவதற்கான சுவர்களை பிடிப்பதில் இருதரப்பு உடன்பிறப்புகளுக்கு இடையே அடிதடி சம்பவங்களும் அரங்கேறியிருப்பது கீழ்மட்ட தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் அரசு கட்டிட சுவர்களிலும் இடம் பிடிப்பதில் இரண்டு கோஷ்டி இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை விசாரித்த கமுதி காவல்துறையினர் திமுகவை சேர்ந்த இரண்டு தரப்பினருக்கும் சிஎஸ்ஆர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புகார் பட்டியல்
இதனிடையே முதல்வர் ஸ்டாலினை வரவேற்பதில் அமைச்சர் என்ற முறையில் ராஜகண்ணப்பணின் கையே ஒங்கி இருக்கிறது. தனது ஆதரவாளர்களை முழுமையாக களமிறக்கி மாஸ் காட்டி வருகிறார். மா.செ. தரப்பினர் சற்றே அமைதி காத்து வருகின்றனர். இதனால் இராமநாதபுரம் திமுகவில் மீண்டும் குழப்பம் எழுந்துள்ளது. இராமநாதபுரம் வரும் முதல்வர் ஸ்டாலின் தரப்பிடம் மா.செ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் மீதான புகார் பட்டியல் வாசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
-
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications