விழாக்கோலத்தில் பசும்பொன்.. முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை... இ.பி.எஸ், ஓ.பி.எஸ். மரியாதை
Recommended Video
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
அவர்களுடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வருகையால் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குருபூஜை
தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக போற்றி வாழ்ந்த முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை இன்று நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு தேவர் திருமகனாருக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பசும்பொன் வந்து செல்கின்றனர்.

தேவர் நினைவிடம்
அதிமுக சார்பில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோர் பசும்பொன் கிராமத்திற்கு வந்திருந்தனர். தேவர் நினைவிடத்தில் மாலைகளை வைத்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மரியாதை செலுத்தினர்.

புறப்பட்டனர்
பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அஞ்சலி செலுத்தியே பிறகே மற்ற கட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் 9.30 மணிக்கு மரியாதை செலுத்த வந்த ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து 9.48-க்கு புறப்பட்டனர். சரியாக 18 நிமிடம் இருந்துவிட்டு அடுத்தக் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்த வழிவிட்டு அங்கிருந்து அவர்கள் புறப்பட்டனர்.

மாலை அணிவிப்பு
பசும்பொன் கிராமத்திற்கு செல்வதற்கு முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்கள் பங்கேற்பு
இதனிடையே சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், நிலோபர் கபில், வளர்மதி, செங்கோட்டையன், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications