நெடில் OPS Vs 4 குறில் OPS..நான் தாங்க பலாப்பழ OPS வந்திருக்கேன்! எல்லா பக்கமும் கேட் போட்டா எப்படி?
இராமநாதபுரம்: நாடாளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் நடக்கும் அரசியல் கூத்துகள் தான் தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது. ஒரு ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக நான்கு ஒ.பன்னீர்செல்வங்களும், ஒரு எம்.பன்னீர்செல்வமும் களமிறங்கி இருக்கும் நிலையில் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இன்னும் சில நாட்களில் தேர்தல் வாக்குப்பதிவானது நடைபெற இருக்கிறது. இதற்கான இறுதி கட்ட பிரச்சாரங்களில் தலைவர்கள் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய தலைவர்கள் தொடங்கி மாநிலத் தலைவர்கள் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காகவும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் பணிகள் தீவிரம்: இது ஒருபுறம் இருக்க அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களை ’நன்கு கவனிக்க’ வேண்டும் என்பதற்காக ஆதரவாளர்களை களத்தில் இறக்கி இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைதான் மிகவும் சிக்கலாக இருப்பதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
ஓபிஎஸ்க்கு சிக்கல்: தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ”நீங்க என்ன சின்னத்துல நிக்கிறீங்க தலைவரே என கேட்பதும்” அவர் பலாபழம் என சொல்வது வாடிக்கையாகி விட்டது. காரணம் மொத்தமாக 6 பன்னீர்செல்வங்கள் தனி தனி சின்னங்களில் தேர்தலில் களம் காண்கின்றனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தான் உண்மையான அதிமுக எனக் கூறி வந்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்ற போராட்டங்களில் தோல்வியடைந்ததால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற ஒன்றை ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
ஓபிஎஸ் Vs ஒபிஎஸ்: மேலும் தாமரை சின்னத்தில் நிற்காமல் சுயேட்சையாக அவர் ராமநாதபுரம் தேர்தலில் களம் இறங்கி இருக்கும் நிலையில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். தற்போது அவரது பெயர் கொண்டவர்களே 5 பேர் அவருக்கு எதிராக களம் இறங்கி இருக்கின்றனர். மதுரை மாவட்டம் மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம், ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே தெற்குகாட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வாகைக்குளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் என்பவரும், மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் ஆகிய குறில் ops-களும், ஒரு எம்.பன்னீர்செல்வமும் போட்டியிடுகின்றனர்.
சின்னத்திலும் சிக்கல்: இதுமட்டுமல்லாமல் வாக்கு இயந்திரத்திலும் அனைவரது பெயரும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளது ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு பலாப்பழம், சோலைஅழகுபுரம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திராட்சை கொத்து, மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு வாளி சின்னம், ராமநாதபுரம் தெற்குகாட்டூரை சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு கண்ணாடி டம்ளர் சின்னம், உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டியை சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு கரும்பு விவசாயி சின்னம், பரமக்குடியை சேர்ந்த எம்.பன்னீர்செல்வத்திற்கு பட்டாணி சின்னம் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் அனைவரும் OPS-ன் சின்னம் வாளி, OPS-ன் சின்னம் கண்ணாடி டம்ளர் என புகைப்படம் இல்லாமல் போஸ்டர் ஒட்டி வருவது வாக்காளர்களை குழப்பமடையச் செய்திருக்கிறது.
பலாபழ ஓபிஎஸ்: சமுதாய வாக்குகளை நம்பி களமிறங்கிய ஓபிஎஸ்க்கு இது சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பல இடங்களில் தன்னை பலாபழ ஓபிஎஸ் என அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். மேலும் சில இடங்களில் ஓபிஎஸ் கொடுக்கும் செலவு பணத்தை கூட நேத்து கொடுத்தாங்களே அது நான்கொடுத்தது தான் ஒபிஎஸ்கள் சொல்லி வருவதும் சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் தான் பிரசாரத்தின் போது பன்னீர்செல்வங்கள் பிரச்சினையை அவர் கையிலெடுத்துப் பேசி வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
-
அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
பல்ப் கொடுத்த பாஜக.. கோபத்தில் குஷ்பூ! நயினாருக்கு தெரியாமல் ஆடிய கேம்! சீனுக்குள் வந்த சுந்தர்.சி! -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்?












Click it and Unblock the Notifications