வீட்டுக்குள் 18 கிலோ.. கையில் 2 கிலோ.. இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பிசின் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தொண்டி அருகே இலங்கைக்கு பல கோடி மதிப்புள்ள கஞ்சா பிசினை கடத்த முயன்றவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கஞ்சா பிசினையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டிணம் பகுதியில் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா பிசின் கடத்தப்பட உள்ளதாக மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Ramanathapuram Cannabis Resin

கஞ்சா பிசின் பறிமுதல்

அப்போது, அந்த நபர் தளிர்மருங்கூர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி சேவியர் என்பவரின் மகன் மனோ (34) என்பது தெரியவந்துள்ளது. மேலும், கஞ்சா செடியில் இருந்து வெளியாகும் இரண்டு கிலோ கஞ்சா பிஷின் (பேஸ்ட்) வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும், அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையை தொடர்ந்து தளிர்மருங்கூர் பகுதியில் உள்ள அவரது வீட்டை சோதனை செய்ததில் மேலும் 18 கிலோ எடையிலான கஞ்சா பிஷின் (பேஸ்ட்) வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

அதனைக் கைப்பற்றிய போலீசார் மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் சுமார் ரூ. 10 கோடி மதிப்பிலான 20 கிலோ கஞ்சா பிஷின் பொட்டலங்களை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. மொத்தமாக அவரிடமிருந்து 20 கிலோ கஞ்சா பிசின் பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ramanathapuram Cannabis Resin

எஸ்பி ஆய்வு

தமிழக காவல்துறை தலைவரின் அறிவுறுத்தலின்படி, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எஸ்.பி.பட்டிணம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Ramanathapuram Cannabis Resin

இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் துரிதமாகச் செயல்பட்ட காவலர்களை எஸ்பி சந்தீஷ் பாராட்டினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்று போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், எஸ்.பி. பட்டினம் பகுதியில் கைது
செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் மூலம் தொடர்புடைய மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+