2 மணி நேரத்தில் ரூ.1 கோடி.. தீபாவளிக்கு ஆடு வாங்க அலைமோதிய கூட்டம்.. எகிறிய விலை

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் சக்கரக்கோட்டை வாரச்சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதிகாலை முதலே ஆடுகளை வாங்கவும் விற்கவும் வியாபாரிகள், ஆடு வளர்ப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் சந்தை களைகட்டியது. ஆடுகளின் விலை வழக்கத்தை விட 20 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்த நிலையில், சந்தை தொடங்கிய இரண்டு மணி நேரத்திலேயே ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

தீபாவளி பண்டிகையின்போது வீடுகளில் ஆட்டு இறைச்சி சமைத்து உறவினர்களுடன் உணவருந்துவது வழக்கம். இதனால் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆட்டு இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு இறைச்சி விற்பனையாளர்கள் தற்போதே ஆடுகளை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Ramanathapuram Goat Market

குவிந்த வியாபாரிகள்

இதற்காக ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆடு வளர்ப்பவர்கள், விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த ஆடுகளை சக்கரக்கோட்டை வாரச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அதிகாலை முதலே ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் சந்தையில் முகாமிட்டிருந்தனர். வழக்கமாக 10 கிலோ இறைச்சி கிடைக்கும் ஒரு ஆடு சுமார் ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையாகும். ஆனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது அதே அளவிலான ஆடு ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது.

1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஆடுகளின் விலை 20 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருந்தாலும், தீபாவளி விற்பனையை முன்னிட்டு இறைச்சி வியாபாரிகள் விலையை பொருட்படுத்தாமல் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் ஒருவருக்கொருவர் பேரம் பேசி வந்ததால் சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

சந்தை தொடங்கிய இரண்டு மணி நேரத்திற்குள் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது, தீபாவளி பண்டிகையையொட்டி ஆட்டு இறைச்சிக்கான தேவை எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை வெளிப்படுத்தியது. ஆடு விற்பனை மட்டுமின்றி நாட்டுக்கோழி விற்பனையும் வாரச்சந்தையில் அதிகரித்திருந்தது. தீபாவளி அன்று வீடுகளில் நாட்டுக்கோழி கறி சமைப்பதற்காக பொதுமக்கள் கோழிகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

நாட்டுக்கோழி விற்பனை அமோகம்

சிலர் தீபாவளிக்கு தேவையான நாட்டுக்கோழிகளை இப்போதே வாங்கி வீடுகளில் வளர்த்து, பண்டிகை நாளில் சமைப்பதற்காக கொண்டு சென்றனர். இதனால் சந்தையில் ஆடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள் விற்பனையும் அதிகரித்தது. மேலும், இந்த ஆண்டு பல ஆடு வளர்ப்பவர்கள் பெரிய ஆடுகளை கிராமங்களுக்கு நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்ததால், சக்கரக்கோட்டை வாரச்சந்தைக்கு வழக்கத்தை விட குறைவான ஆடுகளே விற்பனைக்கு வந்திருந்தன.

இருப்பினும், சந்தைக்கு வந்த ஆடுகளுக்கு அதிக தேவை நிலவியதால் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தீபாவளி பண்டிகைக்காக ஆட்டு இறைச்சி விற்பனையாளர்கள் முன்கூட்டியே ஆடுகளை வாங்கி குவித்து வருவதால், ராமநாதபுரம் பகுதியில் ஆடு மற்றும் நாட்டுக்கோழி விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஆடுகளின் விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகள் வாங்கிக் குவித்ததால் சக்கரக்கோட்டை வாரச்சந்தை இன்று பரபரப்புடன் காணப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+