ராமநாதபுரத்தில் அக்டோபரிலும் அதிக வெயில்.. மன்னார் வளைகுடாவில் 3600 உயிரினங்களுக்கு ஆபத்தா?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இப்போது வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது.. அக்டோபர் மாதம் என்றாலே வழக்கமாக குளுகுளு சூழல் நிலவ வேண்டிய நிலையில், இப்படி அனல் காற்று வீசி வருகிறது. இந்த வெயில் காரணமாக, கடலுக்கு அடியில் வாழும் அரிய உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது... ராமநாதபுரம் கடல் பகுதியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்..!!

தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரை ராமநாதபுரம் கடற்கரை பகுதியாகும்.. இங்குள்ள ஏராளமான குடும்பங்களுக்கு மீன்பிடி மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது.

Ramanathapuram

ராமநாதபுரம் கடற்கரை

இங்குள்ள கடல் பகுதி மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்வதற்கு மிகவும் உகந்த சூழலைக் கொண்டுள்ளது. பாம்பன் குந்துகால் அருகே தொடங்கும் சிங்கிலி தீவு, குருசடை தீவு தொடங்கி தூத்துக்குடி வரை மன்னார் வளைகுடா கடலில் மொத்தம் 21 தீவுகள் அமைந்துள்ளன.

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 தீவுகளும், தூத்துக்குடி பகுதியில் 7 தீவுகளும் உள்ளன. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் கடல் பகுதி, தேசிய கடல்சார் பூங்காவாகப் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

டால்பின்கள், ஆமைகள், கடல்பசுக்கள்

இங்குள்ள தீவுகளை சுற்றியுள்ள நீர்ப்பரப்பில் டால்பின்கள், ஆமைகள், கடல்பசுக்கள், கடல் குதிரைகள் என மொத்தம் 3 ஆயிரத்து 600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.. அதுமட்டுமல்லாமல் பல்வேறு வடிவங்களிலான 134 வகையான பவளப்பாறைகளும் இந்தக் கடலுக்குள் பரந்து விரிந்து காணப்படுகின்றன. இந்த பவளப்பாறைகள் பல கடல்வாழ் உயிரினங்களுக்கு முக்கிய இருப்பிடமாகவும், உணவு ஆதாரமாகவும் விளங்கி வருகின்றன

ஆனால் இந்த ஆண்டு எல் நினோ காரணமாகப் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அக்டோபர் மாதத்திலும் வெயிலின் தாக்கம் குறையாமல் நிலவுவதால், மன்னார் வளைகுடா கடலுக்குள் இருக்கும் உயிரினங்களுக்கும் பவளப்பாறைகளுக்கும் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற முன்னெச்சரிக்கை கண்காணிப்பில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பவளப்பாறைகள்

இந்தத் தீவுகளைச் சுற்றி குச்சி வடிவம், மூளை வடிவம், மலைக்குன்று வடிவம் என 134 வகையான பவளப்பாறைகள் காணப்படுகின்றன.. எனவே மேலோட்டமாக பார்த்துவிட்டு பாதிப்பு குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது என்பதால், கடலுக்குள் நேரில் சென்று ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளார்கள்.

இதற்காக, ஸ்கூபா டைவிங் முறையில் கடலுக்குள் மூழ்கி ஆய்வு செய்யும் சிறப்பு பயிற்சி பெற்ற நிபுணர் குழு விரைவாக ராமநாதபுரம் வரப்போகிறதாம்.. அதனால்தான், கடலின் ஆழத்திற்கே சென்று பவளப்பாறைகளின் நிற மாற்றம் மற்றும் அவற்றின் தற்போதைய நிலையை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார்கள்..

ஆமைகள் முட்டையிடும் காலம்

அதேபோல், ஆமைகள் முட்டையிடும் காலம் டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது.. அந்தக் காலத்தில் ஆமைகள் வழக்கம்போல முட்டையிடுகின்றனவா என்பதை பார்த்தால், அவற்றுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும்..

இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எல் நினோவால் ஆமைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதை டிசம்பர், ஜனவரி மாதங்களுக்குப் பிறகுதான் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார்.

ஆக மொத்தம், மன்னார் வளைகுடாவில் வாழும் அரிய கடல்வாழ் உயிரினங்களுக்கும் பவளப்பாறைகளுக்கும் வெப்ப உயர்வால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது, நிபுணர் குழுவின் ஆய்வுக்குப் பிறகே தெரியவரும்.!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+