காங்கிரசுக்கு சீட் தர முடியாதுன்னு சொல்ல இவர் யாருங்க? ராஜகண்ணப்பன் மீது கே.ஆர்.ராமசாமி பாய்ச்சல்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க மாட்டோம் என்று சொல்ல இவர் யாருங்க என அமைச்சர் ராஜகண்ணப்பனை சாடியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.ஆர்.ராமசாமி.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டமிட்டு குழப்பம் விளைவிப்பதாக கே.ஆர்.ராமசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக -காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே விரிசல் உருவாகும் சூழல் அமைந்துள்ளது.

என்ன பிரச்சனை?: நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததை போல், திருவாடானை தொகுதியை பொறுத்தவரை கரியமாணிக்கம், கே.ஆர்.ராமசாமி, கருமாணிக்கம், என ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறையை சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இதனிடையே தற்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கத்துக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை, நேற்றைய தினம் அமைச்சர் நிகழ்ச்சியை புறக்கணித்திருந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கருமாணிக்கம்.
ராஜகண்ணப்பன் பேச்சு: அந்தக் கடுப்பில் மைக் பிடித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், இனி இந்தத் தொகுதியை கூட்டணிக்கு கொடுப்பதாக இல்லை, நாங்க தான் போட்டியிடுவோம் எனக் கூறி காங்கிரஸ் கட்சியை அதிர வைத்தார். அதுமட்டுமல்ல அரசு நிகழ்ச்சிக்கு திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. வருகிறார் வரவில்லை என்பதை பற்றியெல்லாம் தாம் கவலைப்படமாட்டேன் எனவும் ஆட்சியில் இருப்பதால் நலத்திட்டங்களை கொண்டு வர வேண்டியது தங்கள் பணி எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருந்தார்.
கே.ஆர்.ராமசாமி பதிலடி: இந்நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.ஆர்.ராமசாமி, நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் சட்டமன்றத் தேர்தலை பற்றி அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது என வினவினார். இப்போது என்ன சட்டமன்றத் தேர்தலா வருகிறது, திருவாடானை தொகுதியை கொடுக்க முடியாது என்று சொல்வதற்கு என வினவினார்.
கூட்டணியில் குழப்பம்?: திமுக காங்கிரஸ் கூட்டணியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் குழப்பம் விளைவிக்கும் வேலையை செய்கிறார் என்றும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவாடானை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் தான் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ராமசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications