விஜய் அண்ணாக்கு ஓட்டு போடுங்கம்மா! 2026 க்கு இப்பவே பிரச்சாரம்! அதுவும் எந்த தொகுதியில் தெரியுமா?
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியினர் தளபதி வாழ்க என கோஷமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் தற்போது தொடங்கியுள்ளார். அவரது கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் ஆகும்.

அதாவது தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக நேற்றைய தினம் பதிவு செய்தார் விஜய். இந்த விஜய் மக்கள் இயக்கம் ஏற்கெனவே மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது. அது போல் இந்த இயக்கத்தின் கொடியை வைத்து கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நிறைய இடங்களில் பிரதான கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் விஜய் அறிவித்துள்ளார்.
இதையடுத்து தனது 69 ஆவது படம் கடைசி படமாக இருக்கும் என்றும் விஜய் கூறியிருக்கிறார். இது விஜய்யை திரையில் ரசிக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதை அடுத்து கட்சியினர் விஜய்யின் கொடியுடன் ராமநாதபுரத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரத்தில் கேனிக்கரை, வண்டிக்காரத்தெரு, அரண்மனை பகுதி மற்றும் கடைவீதியில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் விஜய் ரசிகர்களும் ஒன்று கூடி பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க வந்த கிராமப்புறங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் முதியவர்களிடம் இனி விஜய்க்குத்தான் வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரத்தையும் அவர்கள் ஆரம்பித்தனர். விஜய் கட்சி 2026 சட்டசபை தேர்தலை குறி வைத்துள்ளது என்ற போதிலும் தற்போதே கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கியது நல்லதொரு தொடக்கமாகவும் அவர்களின் வேகத்தை காட்டுவதாகவும் உள்ளது. அதிலும் ராமநாதபுரம் எம்பி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவார் என கூறப்படும் மாவட்டத்தில் விஜய் கட்சி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications