ஓபிஎஸ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ராமநாதபுரம் போட்டி வேட்பாளர் நவாஸ்கனி யை விட ரொம்ப குறைவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் சொத்து மதிப்பு அங்கு போட்டியிடும் திமுக கூட்டணியின் சிட்டிங் எம்பியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை விட பலமடங்கு குறைவாக உள்ளது.
முன்னாள் முதல்வர் ஒ பன்னீர் செல்வம் அதிமுகவில் நீக்கப்பட்ட நிலையில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். வரும் லோக்சபா தேர்தலில் அவர் பாஜக கூட்டணியில் உள்ளார். மேலும் பாஜக கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம் சுயேச்சை வேட்பாளராக தனிச்சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஓ பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனு தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அவருக்கு சின்னம் ஒதுக்கப்பட உள்ளது. அந்த சின்னத்தில் வரும் லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வத்தின் சொத்து மதிப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தலில் போட்டியிட அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ள பிரமாணப்பத்திரத்தில் சொத்து விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி ஓ பன்னீர் செல்வம் கையில் ரூ.86,335 ரொக்கமாக உள்ளது. வங்கி கணக்கு சேமிப்பு, முதலீடு மூலம் ரூ.2.87 லட்சம் உள்ளது. 16 கிராம் தங்க நகைகள் உள்ளன. இதுதவிர வங்கி பத்திரங்களில் முதலீடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் தன்னிடம் மொத்தம் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.1.11 கோடி என தெரிவித்துள்ளது. மறைந்த தனது மனைவியின் பெயரில் ரூ.10.17 லட்சம் அசையும் சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 26.31 ஏக்கர் விவசாய நிலம், விவசாயம் அல்லாத நிலமாக 6.44 ஏக்கர், தேனி மாவட்டம் தென்கரை கிராமத்தில் ரூ.27.09 லட்சம் மதிப்பிலான பண்ணை வீடு உள்ளது. அதன்படி மொத்தம் ரூ.4.12 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் ஓ பன்னீர் செல்வம் பெயரில் உள்ளது. மறைந்த அவரது மனைவியின் பெயரில் ரூ.67.83 ஆயிரம் அமதிப்பிலான அசையா சொத்த உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த விபரங்கள் படி பார்த்தால் ஓ பன்னீர் செல்வத்துக்கு மொத்தம் ரூ.1.11 கோடி அசையும் சொத்து, ரூ.4.12 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் என மொத்தம் ரூ.5.23 கோடி மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே உள்ளது. அதன்படி பார்த்தால் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை விட ஓ பன்னீர் செல்வத்தின் சொத்து மதிப்பு என்பது குறைவாக உள்ளது.
இந்த தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி தனது வேட்புமனுவில் கையில் ரூ.12.56 லட்சம் ரொக்கம், மனைவி ஹம்சத் பர்வீன் கையில் ரூ.1.89 லட்சம் ரொக்கப்பணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு அவரிடம் Harley கார் இருப்பதாகவும், 1 கிலோ 646 கிராம் தங்க நகைகள், வங்கி முதலீடு உள்பட மொத்தம் ரூ.8.60 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.மேலும் மனைவியிடம் 1 கிலோ 510 கிராம் தங்க நகைகள் உள்பட அவரது பெயரில் ரூ.1.48 கோடி அசையும் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். அதோடு நவாஸ் கனியிடம் ரூ.52.71 கோடி அசையா சொத்துகளும், மனைவி பெயரில் ரூ.10.05 கோடி அசையா சொத்துகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications