ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பலியானது எப்படி? வெளியானது மருத்துவ அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை இறந்தது எப்படி என்பது குறித்து மருத்துவ விவர அறிக்கையை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், பாசிப்பட்டினத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் - நூருல் ஆஷிகா தம்பதியினருக்கு, இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 16.10.2026 அன்று இரவு 11.29 மணியளவில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் இரண்டாவது குழந்தையாக 2 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது.

ramanathapuram

20.10.2026 அன்று இரவு 10.05 மணியளவில், குழந்தைக்கு மஞ்சள் காமாலை (Neonatal Jaundice) ஏற்பட்டதையடுத்து, பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் (SNCU) உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டது. அப்போது குழந்தையின் பிலிரூபின் அளவு 23 mg/dL ஆகவும், ஹீமோகுளோபின் அளவு 14 g/dL ஆகவும் இருந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிலிரூபின் அளவு 26 mg/dL ஆக அதிகரித்ததுடன், ஹீமோகுளோபின் அளவு 7 g/dL ஆகக் குறைந்தது.

குழந்தைக்கு இருபுற ஒளிச்சிகிச்சை (Double Surface Phototherapy) மற்றும் நரம்பு வழித் திரவங்கள் வழங்கப்பட்டன. மேலும், புற இரத்தப் பரிசோதனையில் (Peripheral Smear) இரத்தச் சிதைவு வகை இரத்தசோகை (Hemolytic Anemia) இருப்பது கண்டறியப்பட்டது.

21.10.2026 அன்று அதிகாலை 5.30 மணியளவில் குழந்தையின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, அதிர்ச்சி நிலை (Shock) ஏற்பட்டது. இதையடுத்து, இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பதற்கான மருந்துகள் (Inotropic Support), செயற்கை சுவாசம் மற்றும் இரத்தம் செலுத்துதல் உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

அனைத்து தீவிர சிகிச்சை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும், 21.10.2026 அன்று காலை 10.00 மணியளவில் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவமனை முதல்வர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினத்தை சேர்ந்த முகமது அசாருதீன்- நூருல் ஆஷிகா தம்பதிக்கு கடந்த 16ஆம் தேதி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன் தினம் இரவு குழந்தை அழுது கொண்டே இருந்தது. இதனால் குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

நேற்றைய தினம் குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்தனர். ஆஷிகாவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தை பிறந்து 7 நாட்களிலேயே மஞ்சள் காமாலை காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்போது இரண்டாவதாக பிறந்த குழந்தையும் 5 நாட்களில் மஞ்சள் காமாலையால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், குழந்தை பிறந்த முதல் 4 நாட்கள் நன்றாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு உடல்நிலை மோசமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+