ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடைவிடாமல் என்ஜாய்.. சவுதி அரேபியாவா இது?.. பார்க்க அமெரிக்கா மாதிரி இருக்கே.. நல்ல முன்னேற்றம்தான்!

Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரேபியாவில் எங்கும் நடக்காத விதமாக 4 நாட்கள் ரேவ் பார்ட்டி அந்நாட்டு அரசால் நடத்தப்பட்டது. இதை பார்த்து உலக நாடுகள் வியந்து போயுள்ளன.

எண்ணெய் வளம் நிறைந்த சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சிக்கு வந்த பிறகு நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். அதிலும் முற்போக்குத்தனமான முன்னெடுப்புகள் அனைவரையும் பாராட்ட வைத்தது.

இவரது ஆட்சிக்கு பிறகு முக்கியமான மாற்றங்கள் என்றால் அது பெண்கள் வாகன ஓட்டும் தடையை நீக்கியதாகும். மற்றொரு பாலின பாகுபாட்டை அறவே ஒழித்தார். ரெஸ்டாரென்டுகளில் ஏதேனும் இசை ஒலித்தால் அந்த ஹோட்டலை தண்டிக்கும் விதத்தையும் மாற்றினார்.

கத்தார் சென்ற சவுதி இளவரசர் முகமது மின் சல்மான்..4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர் பெறும் உறவுகத்தார் சென்ற சவுதி இளவரசர் முகமது மின் சல்மான்..4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புத்துயிர் பெறும் உறவு

இசை கச்சேரி

இசை கச்சேரி

இந்த நிலையில் எல்லாவற்றிற்கும் மேலாக எம்டிஎல் பீஸ்ட் சவுண்ட்ஸ்டிராம் என்ற 4 நாட்கள் இசை நிகழ்ச்சியை அரசே நடத்தியது. இதில் டியாஸ்டோ மற்றும் ஆர்மின் வான் புரேன் ஆகியோர் டிஜேக்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் 1.80 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

ரேவ் பார்ட்டி

ரேவ் பார்ட்டி

மேற்கத்திய உடைகளை அணிந்து கொண்டு பெண்கள் ரேவ் பார்ட்டியில் இசைக்கேற்ப நடனம் ஆடினர். அது போல் ஆண்களும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு பார்ட்டியில் கலந்து கொண்டனர். இதுகுறித்து அரச குடும்பத்தை சேர்ந்தவரும் ரேவ் பார்ட்டியில் கலந்து கொண்டவருமான இளவரசர் ஃபஹாத் அல் சவுத் கூறுகையில் உலக நாடுகளுடன் ஒற்று போக விரும்புகிறோம்.

ஃபார்முலா ஒன்

ஃபார்முலா ஒன்

எங்களை முன்னேற விடுங்கள். நாங்கள் விரும்பும்படி வாழ விடுங்கள் என்றார். நாடு பழமைவாத போக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது நன்றாகவே தெரிகிறது. ஃபார்முலா ஒன் பந்தயங்கள், ஆர்ட் பீனியல்கள் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரானின் வருகை என சவுதி அரேபியாவில் மாற்றங்கள் நடந்து வருகின்றன.

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

பட்டத்து இளவரசரான சவுதி அரேபியாவை எண்ணெய் வர்த்தகத்தை தவிர பிற துறைகளிலும் வலுப்படுத்தவே விரும்புகிறார். சவுதியில் நடத்தப்பட்ட இந்த ரேவ் பார்ட்டியை பாரத்துவிட்டு இது சவுதியா இல்லை அமெரிக்காவா என்ற சந்தேகம் அதை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் எழுந்தது. இந்த 4 நாட்களில் தொழுகை நேரம் தவிர ரேவ் பார்ட்டி நடந்து கொண்டே இருந்தது.

பிரார்த்தனை

பிரார்த்தனை

தொழுகை நேரத்தின் போது ஒரு 15 நிமிடங்கள் அனைவரும் அமைதியாக பிரார்த்தனை செய்தனர். அதன் பிறகு பார்ட்டிகளில் மகிழ்ந்தனர். இது போன்ற நிறைய மாற்றங்களை கொண்டு வர பட்டத்து இளவரசர் விரும்புகிறார் என்கிறார்கள். அண்மையில்தான் பணிநாட்களை நான்கரை நாட்களாக குறைத்து உலகிலேயே முதல் நாடு என்ற பெருமையை பெற்றது.

English summary
Giant Rave party in Saudi Arabia desert leads other countries stunning moment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X