சவுதி விமான நிலையத்தில் ஷாக்.. ஹவுதிகளின் ஏவுகணை அட்டாக்கில் 12 பேர் உடல் சிதறி பலி – 300 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நேற்று ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் பலியாகி உள்ளதோடு, 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இது சவுதி அரேபியா - ஹவுதிகள் இடையேயான மோதலை தீவிரமாக்கி உள்ளது.

சவுதி அரேபியாவிற்கும், ஏமனில் செயல்பட்டு வரும் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகளுக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது.

Houthi attack

ஹவுதி அமைப்பினர் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் அபா விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த தாக்குதலில் மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர்.

நேற்றைய தினம் மீண்டும் ஹவுதிகள் ரியாத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த விமான நிலையத்தில் ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பலரும் அடுத்தடுத்து இறந்துள்ளனர்.

தற்போது வரை மொத்தம் 12 பேர் பலியாகி உள்ளனர். 309 பேர் காயமடைந்துள்ளனர். என்று சவுதி அரேபியாவின் விமான போக்குவரத்து துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இறந்த 12 பேரில் 4 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். 2 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர். அமெரிக்கா, ஜோர்டான், பாலஸ்தீனம், சிரியா, சூடான், எகிப்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என்று மொத்தம் 12 பேர் பலியாகி உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 7 நாளில் மட்டும் இந்த விமான நிலையத்தில் ஹவுதிகள் நடத்திய 3வது தாக்குதல் இதுவாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி ஹவுதிகள் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கையும் பல வான்வெளி தாக்குதல் தடுப்பு கருவிகளை சவுதி அரேபியா பயன்படுத்தி வருகிறது. இருப்பினும் இந்த சிஸ்டம்களால் கூட இந்த தாக்குதலை தடுக்க முடியவில்லை. இது சவுதி அரேபியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

இதனால் சவுதி அரேபியா தனது பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ரியாத் சர்வதேச விமான நிலையத்தை தொடர்ந்து ஹவுதிகள் தாக்கி வருவதால் அங்கு விமான போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் தங்களின் விமான சேவையை நிறுத்தி உள்ளதால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+