Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தமாக மாறிய வானிலை.. சவுதியில் பனிப்பொழிவு.. பாலைவனத்தை மூடிய வெள்ளை பனி! இது எப்படி சாத்தியம்

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சவுதி அரேபியா என்றாலே அங்கு நிலவும் அதீத வெப்பமும் வறட்சியும் தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட சவுதியில் இப்போது திடீரென அதீத காற்றுடன் கனமழை பெய்துள்ளது. அவ்வளவு ஏன் பனியும் கொட்டியுள்ளது. இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பருவநிலை மாற்றம் என்பது இப்போது மிக மோசமான ஒரு சிக்கலாக உருவாகி இருக்கிறது. வறண்ட வானிலை, திடீரென கொட்டும் அதீத மழை என்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக மாறி வருகிறது.

saudi arabia middle east uae

மேலும், கனடா உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் வெயில் அடிப்பதும், மத்திய கிழக்கில் எப்போதும் மழை இருக்கும் பகுதிகளில் குளிர் மழை என்று வானிலை மொத்தமாக மாறும் சம்பவங்களும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதுபோன்ற ஒரு வினோத வானிலை தான் இப்போது சவுதியில் நடந்துள்ளது.

சவுதி: மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று சவுதி.. இந்த பிராந்தியத்தில் எப்போதுமே வெப்பம் அதிகமாகவே இருக்கும். இங்கு சர்வ சாதாரணமாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகும். குறிப்பாகக் கடந்த 2010ல் ஒரு சமயம் 125 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கூட பதிவானது. உலகிலேயே அதீத வெப்பமான நாடுகளில் ஒன்றாகச் சவுதி இருக்கிறது. மழை கூட ஆண்டுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பெய்யும்.

saudi arabia middle east uae

மழையே குறைந்த அளவு என்றால் பனிப்பொழிவு குறித்தெல்லாம் யோசிக்கக் கூட முடியாதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உங்கள் நினைப்புக்கு நேர்மாறான வானிலை தான் இப்போது அங்குப் பதிவாகி இருக்கிறது. சவுதி அரேபியாவில் உள்ள அல்-ஜாவ்ப் என்ற பகுதியில் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. ஆம், எப்போதும் வறண்ட வானிலையே நிலவும் இந்த பாலைவன பகுதியில் முதல்முறையாக பனிப் பொழிந்துள்ளது. இந்த பிராந்தியத்தில் பனிப்பொழிவு இதுவே முதல்முறை என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பனிப்பொழிவு: கடந்த சில காலமாகவே இந்த பிராந்தியத்தில் வானிலை மொத்தமாக மாறி வருகிறது. கடுமையான புயல் மற்றும் ஆலங்கட்டி மழை ஏற்கனவே அங்குப் பெய்த நிலையில், இப்போது முதல்முறையாகப் பனிப்பொழிவும் நடந்துள்ளது.

கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவை இப்பகுதியின் சில பகுதிகளில் வீசியது.. இதனால் அங்குள்ள மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டு, குளிர்ச்சியான வானிலை ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகமான கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பனிப்பொழிவு குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோவும் டிரெண்டாகி வருகிறது.

மொத்தமாக மாறும் வானிலை: சவுதி அரேபியா மட்டுமின்றி ஐக்கிய அமீரகத்திலும் மழை மற்றும் குளிர்ச்சியான வானிலை நிலவியதாகவும் கூறப்பட்டுள்ளது. அரேபிய கடலில் இருந்து உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த திடீர் வானிலை மாற்றத்திற்குக் காரணமாக இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஈரப்பதம் நிறைந்த காற்றை வறண்ட பகுதிக்குள் கொண்டு வந்துள்ளது இதன் காரணமாகவே கனமழையும் பனிப்பொழிவும் ஏற்பட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை: மேலும், இந்த கனமழை மற்றும் குளிர்ச்சியான வானிலை இத்தோடு முடியாதாம். வரும் நாட்களிலும் கனமழை இருக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சவுதி வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது. வரும் நாட்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கனிக்கப்பட்டுள்ளது. இந்த வானிலையால் சாலைகளில் தூரத்தில் வரும் வாகனங்களைப் பார்க்க முடியாத சூழல் ஏற்படலாம் என்றும் இதனால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+