துபாய்கே “டஃப்”.. வேற லெவல் சவூதி! “கியூப்” வடிவில் நகரம் - அது என்ன முகாப்? கஃபதுல்லாவின் காப்பியா?
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் முகாப் எனப்படும் கியூப் வடிவிலான புதிய நகரை உருவாக்க இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.
ரியாத்: சவூதி அரேபிய தலைநகரான ரியாத்தில் கியூப் வடிவிலான புதிய பிரம்மிப்பூட்டும் நகரை உருவாக்க இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்து இருக்கிறது. 400 மீட்டர்கள் அகலம், 400 மீட்டர்கள் நீளம், 400 மீட்டர்கள் உயரம் கொண்ட கன சதுர வடிவிலான இந்த நகரத்திற்குள் 20 அரசு கட்டிடங்கள் இருக்கும் என்று சவூதி அரேபிய அரசு தெரிவித்து உள்ளது.
அரேபிய நாடுகளில் முதன்மையானதாக கருதப்படும் சவூதி அரேபியா எண்ணெய் உற்பத்தி, மக்காவுக்கு வரும் ஹஜ், உம்ரா யாத்திரிகர்களின் மூலம் பெரும் வருவாயை ஈட்டி வந்தது. இதனை தாண்டி மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவூதி முன்னேறி வருகிறது.
அதேபோல் துபாய்க்கு போட்டியாக சுற்றுலா துறையிலும் வளர்ச்சியடைய பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை சவூதி அரேபியா மேற்கொண்டு வருகிறது. துபாயில் உள்ள புரூஜ் கலிபாவை விட உயரமான கிங்டம் டவர் என்ற கட்டிடத்தை கட்ட திட்டமிட்டது.

விசன் 2030
"விசன் 2030" என்ற திட்டத்தின் கீழ் சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களை மறுகட்டமைப்பு செய்து வருகிறது அந்நாட்டு அரசு. ஜித்தா, ரியாத் போன்ற அந்நாட்டின் முக்கிய நகரங்களில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்தான் ரியாத்தில் முகாப் என்ற உலகின் மிகப்பெரிய நகரத்தை உருவாக்க அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.

முகாப் நகரம்
விசன் 2030 திட்டத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்கு இந்த நகரத்தை கட்டமைத்து முடிக்க இருப்பதாக அறிவித்து உள்ளார்கள். அரபியில் முகாப் என்றால் கன சதுரம் என்பார்கள். ஆங்கிலத்தில் கியூப் என்று அழைக்கப்படும் வடிவத்தில் இந்த நகரத்தை கட்டமைக்க உள்ளனர். ரியாத்தின் மத்திய பகுதியில் இந்த முகாப் நகரம் அமைக்கப்பட இருக்கிறது.

என்ன சிறப்பு?
முகாப் நகரத்திற்குள் ஒரு லட்சம் குடியிருப்புகள், 9,000 விடுதி அறைகள், 14 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிலான அலுவலக இடம், டஜன் கணக்கான பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் குறிப்பாக சமூக வசதிகளுக்காக 18 லட்சம் சதுர மீட்டர் இடம் ஒதுக்கப்பட இருப்பதாக சவூதி அரசாங்கம் தெரிவித்து உள்ளது.

47 பில்லியன் டாலர்
19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முரபா திட்டத்திற்காக 47 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதில் முகாப் கியூப் பெரும் பங்கு வகிக்கிறது. அதே நேரம் இந்த முகாப் கியூபுக்காக எவ்வளவு செலவிடப்படும் என்பது தெளிவாக விளக்கப்படவில்லை.

ஏன் சதுர வடிவம்?
இட சிக்கனத்திற்காகவே இந்த கியூப் வடிவிலான நகரத்தை உருவாக்குவதாக சவூதி தெரிவித்து இருக்கிறது. ஹாலோகிராபி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலமாக கியூபிற்குள் மக்களை ஈர்க்கும் பல்வேறு வசதிகள் இருக்கும் என்று கூறி உள்ளார்கள். இதன் மையப்பகுதியில் சுழல் வடிவிலான கோபுரம் அமைக்கப்பட உள்ளது. அதற்குள் வணிக நிறுவனங்கள், கலாச்சார, சுற்றுலா மையங்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நஜ்தி கட்டிட கலை
உலக புகழ்பெற்ற நவீன நஜ்தி கட்டிட கலை வடிவமைப்பின்படி இந்த நகரத்தை சவூதி அரேபியா முழுக்க முழுக்க அமைக்க உள்ளது. பாரம்பரிய கட்டிட முறையான நஜ்தி, பாலைவனப் பகுதிகளில் அமைக்கப்படும் கட்டிடங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பருவ நிலை, இயற்கை சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் சிறப்பு நஜ்தி கட்டிடக் கலைக்கு உள்ளது.

காபாவின் காப்பியா?
இஸ்லாமியர்களின் புனித தளமான மக்காவில் அமைந்து உள்ள காபாவும் சதுர வடிவில்தான் இருக்கும். இந்த சூழலில் ரியாத்திலும் உயரமான சதுர வடிவிலான நகரத்தை அமைப்பது காபாவுக்கு போட்டியா? என்று அந்நாட்டை சேர்ந்தவர்களே கேள்வி எழுப்பி உள்ளார்கள். ட்விட்டரில் இதனை கண்டித்து புது கஃபா என்ற பெயரில் ஹேஷ்டேக்குகளையுக் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications