சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேலம் வழியாக செல்லும் இந்த 12 சிறப்பு ரயில்கள் ரத்து.. ரயில்வே வெளியிட்ட விவரம்

Google Oneindia Tamil News

சேலம்: பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் நிஜாமுதீன்-கோவை சிறப்பு ரயில் (06078) உள்பட 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம் ரயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில்வே பகுதிக்குட்பட்ட காசிபேட்-பல்கர்ஷா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

12 special trains passing through Salem canceled due to Maintenance work

இதன் காரணமாக சேலம் வழியாக செல்லும் கோவை-நிஜாமுதீன் சிறப்பு ரயில் (வண்டி எண் 06077) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் நிஜாமுதீன்-கோவை சிறப்பு ரயில் (06078) வருகிற 14 மற்றும் 21-ந் தேதிகளிலும், கோரக்பூர்-கொச்சிவேலி சிறப்பு ரயில் (வண்டி எண் 02511) 11, 15, 16, 18, 22 மற்றும் 23-ந் தேதிகளிலும், மறுமார்க்கமாக செல்லும் கொச்சிவேலி-கோரக்பூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 02512) 13, 14,18,20 மற்றும் 21-ந் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் பரோனி-எர்ணாகுளம் சிறப்பு ரயில் (வண்டி எண் 02521) 12, 19 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் இருந்து செல்லும் எர்ணாகுளம்-பரோனி சிறப்பு ரயில் (வண்டி எண் 02522) 16, 23 ஆகிய தேதிகளிலும், திருவனந்தபுரம்- நிஜாமுதீன் சிறப்பு ரயில் (வண்டி எண் 06167) 13, 20 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக செல்லும் நிஜாமுதீன்-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06168) 16, 23 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன. பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த ரயில்கள் உள்பட சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, இவ்வாறு கூறினார்கள்.

English summary
railway officials said 12 special trains passing through Salem canceled due to Maintenance work
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X