ஏற்காடு எஸ்டேட்டில் சத்தமாக கேட்ட இந்தி பாடல்.. கதவை உடைத்து பார்த்தால்.. பயங்கரம்!
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு எஸ்டேட்டில் பணிபுரிந்த வெளிமாநில தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓடிய கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதி, புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. இங்கு உள்ள எஸ்டேட்களில் பல்வேறு ஊர்கள் மற்றும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஏற்காடு செம்மநத்தம் ஊராட்சிக்குட்பட்ட காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராரா எஸ்டேட்டில் ஜார்கன்ட் மாநிலம் கூட்டி கிராமத்தை சேர்ந்த ராம்பகன் மகன் கோண்டாபகன் (41), மற்றும் அவரது மனைவி சுதிகேன்ஸ் (36) ஆகியோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள பணியாளர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

அருகிலேயே தங்கினார்
இவர்கள் உறவினர் ஹைரா போத்ரே என்பவர் திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வாரமாக கோண்டாபகன் - சுதிகேன்ஸ் குடியிருப்பிற்கு அருகில் உள்ள குடியிருப்பில் தங்கியுள்ளார்.

சத்தமாக இந்தி பாடல்
இவர்கள் மூவரும் கடந்த 3 தினங்களாக ஒன்றாக மது அருந்தி வந்ததாகவும், நேற்று இரவு மூவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு, இந்தி பாடல்களை சத்தமாக கேட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இருவர் படுகொலை
இது குறித்து எஸ்டேட் மேலாளரிடம் அருகில் வசிக்கும் ஜார்கன்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். மேலாளர் சுனில்குமார் அங்கு வந்து கதவு தட்டி திறக்காததால், கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு கோண்டாபகன் தலையில் வெட்டியும், சுதிகேன்ஸ் கழுத்தறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். ஹைரா போத்ரேவை காணவில்லை.

மோப்ப நாய் வருகை
பின்னர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சேலம் ரூரல் டி.எஸ்.பி. உமாசங்கர், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் லில்லியை கொண்டும் தேடுதல் நடத்தப்பட்டது.

சோதனைச்சாவடியில் தீவிரம்
மேலும் இரு கொலைகளையும் ஹைரா போத்ரே தான் செய்திருக்க கூடும் என்று சந்தேகித்து, ஏற்காடு மலைப்பாதை சோதனைசாவடிகளில் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், அருகில் உள்ள மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தேடுதல் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தெரிவித்தார்.
-
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications