8 வழிச்சாலை திட்டம் இன்னும் 2 ஆண்டுகளில் வரும்.. அடித்து சொல்லும் சேலம் பாலாஜி ஹாசன்
Recommended Video
சென்னை: 8 வழிச்சாலை திட்டம் இன்னும் 2 ஆண்டுகளில் வரும் என சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சன் நியூஸ் சேனலில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசன் அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறுகையில் எனக்கு சொந்த ஊர் சேலம்தான். நியூமராலஜிபடி என்னுடைய பெயரான பாலாஜியுடன் ஹாசனை சேர்த்துக் கொண்டேன்.
சேலத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளேன். என்ஜினியரிங் மெக்கானிக்ஸ் பாடப்பிரிவை எனக்கு சொல்லிக் கொடுத்த பேராசிரியர் ஒரு ஜோதிடர். அவர் சொல்வது எல்லாம் சரியாக இருக்கும். அவரிடம் கொஞ்சம் ஜோதிடம் கற்றுக் கொண்டேன்.

கணிப்பு
இதையடுத்து அவர் வேறு கல்லூரிக்கு மாறியதால் தனியார் ஜோதிட பயிற்சி மையத்தில் இணைந்து 2010-2011-ஆம் ஆண்டு வரை கற்றுக் கொண்டேன். 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு ஆய்வு செய்யத் தொடங்கினோம். ஒரு விளையாட்டு போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை 3 விஷயங்களை கொண்டு கணிக்கிறேன். அவை போட்டி நடக்கும் இடம், போட்டி விளையாட தொடங்கும் நேரம், விளையாட்டு நடைபெறும் நாள். இவற்றை வைத்து கணிப்பதுதான். சுருக்கமாக சொல்ல போனால் ஒரு குழந்தையின் பிறந்த இடம், தேதி, நாள் ஆகியவற்றை வைத்து எப்படி கணிக்கிறோமோ அப்படிதான் போட்டி குறித்தும் கணிக்கப்படுகிறது.

கணிப்போம்
இதில் இரு அணிகளின் கேப்டன்களின் ஜாதகத்தை எடுத்து கொள்ள வேண்டும். இதில் யாருடையது சிறப்பாக இருக்கிறது என பார்க்க வேண்டும். பின்னர் இரு அணிகளின் நாடுகளுக்கும் ஒரு ராசி இருக்கும். அதையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இது போக பஞ்ச சாஸ்திர பட்சி என்ற ஒன்று உள்ளது. அதை வைத்து பெயர் பட்சி, எழுத்து பட்சி, ரூப பட்சி, நட்சத்திர பட்சி, திதி கர்ண பட்சி ஆகியவற்றை கொண்டும் கணிப்போம்.

சரியாகத்தான்
இதில் எந்த அணிக்கு அதிக பாயிண்ட்டுகள் கிடைக்கிறதோ அந்த அணியே வெற்றி பெறும் என கூறுகிறோம். இந்த ஆண்டு உலக கோப்பை போட்டியில் 43 போட்டிகளில்39 போட்டிகளில் வெற்றியை சரியாகவே கணித்துள்ளேன். அரையிறுதி போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து , நியூசிலாந்து செல்லும் என சொல்லியிருந்தேன். இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் அல்லது இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் போட்டி நடக்கும் என தெரிவித்திருந்தேன். இதில் இந்தியா இறுதி போட்டிக்கு செல்லாது என்றேன். அதுபோல் இதுவரை உலக கோப்பையை வாங்காத அணியே வெல்லும் என்றேன். இதெல்லாம் சரியாகத்தான் உள்ளது.

100 சதவீதம்
150 பேர் விளையாடிய உலக கோப்பையில் கேன் வில்லியன்சன் பிளேயர் ஆஃப் தி சீரிஸாக தேர்வு செய்யப்படுவார் என்றேன். அதுபோல் நடந்தது. ஐபிஎல் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதையும் என்னால் சொல்ல முடியும். தேதி அறிவிக்கப்பட்டவுடன், வீரர்கள் தேர்வு முடிந்தவுடன் நிச்சயம் சொல்ல முடியும். சேலத்துக்கு எட்டு வழிச்சாலை 100 சதவீதம் வருவதற்கான வாய்ப்புகள் ஜாதக அடிப்படையில் அதிகம் இருக்கிறது.

சூரியன்
சனியினுடைய சொந்த ராசி மகரம். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு அவர் மகர ராசியில் இருப்பார். அந்த நேரத்தில் சாலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து வரும் என ஜோதிட அடிப்படையில் உள்ளது. ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வரக்கூடிய கிரகம் சூரியன். இந்த ஆடி மாதம் முடிந்தவுடன் போலீஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

புரட்டாசி
சிம்ம ராசியை குறிக்கக் கூடிய சிவகங்கை, புதுக்கோட்டை, மத்திய திருச்சி, தனுசு ராசியை குறிக்கக் கூடிய கோவை, ஈரோடு, திருப்பூர், மீன ராசியை குறிக்கக் கூடிய மதுரை, கரூர், திண்டுக்கல், திருச்சியின் தென் பகுதி ஆகியவற்றில் போலீஸ் துறைக்குள்ளேயே உள்ள பிரிவுகளில் ஏதாவது ஊழலோ அல்லது பழைய வழக்குகளோ, பழைய பிரச்சினைகளை பேசுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்துக்களின் முன்னாள் சிலைகள் மீட்கப்படும். இவையனைத்தும் ஆடியிலிருந்து புரட்டாசி மாதத்துக்குள் நடக்கும் என தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications