‘நோ’ படம் எடுக்கிறேன்! நீ தான் அடுத்த ‘லேடி சூப்பர் ஸ்டார்’! கலர் கலராய் ரீல் விட்ட வேல் சத்ரியன்!
சேலம் : சேலத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய போலி இயக்குனர் வேல் சத்ரியன், வாய்ப்பு தேடி வந்த பெண்களை மயக்கியது எப்படி என போலீசாரிடம் பல திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையத்தை சேர்ந்த வேல் சத்ரியன் என்பவர் தனது உதவியாளரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெயஜோதி என்பவர் மூலம் சினிமாவில் நடிக்க நடிகர்கள் நடிகைகள் தேவை என விளம்பரம் செய்துள்ளார்.
அவரிடம் வாய்ப்பு கேட்டு சேலம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்ற நிலையில், அவரை தனது அலுவலகத்தில் வேலைக்கு வைத்த வேல் சத்ரியன் அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக அந்த இளம்பெண், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

டுபாக்கூர் இயக்குனர்
சினிமாவுக்கு வாய்ப்பு தருவதாக கூறி வேலு சத்ரியன் இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவர்களை வைத்து ஆபாச படம் எடுத்ததாகவும் புகார் அளித்தார். இதை அடுத்து சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் வேல் சத்திரியனின் சினிமா அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல இளம் பெண்களிடம் தவறாக பழகியதும் அவர்களை வைத்து ஆபாச படம் எடுத்ததும் தெரியவந்தது. அடுத்தடுத்து வேல் சத்ரியனின் லீலைகள் வெளிவர தொடங்கி நிலையில் இளம்பெண்கள் மற்றும் பெற்றோர்களிடம் அவர் நடத்திய உரையாடல்களும் வெளியாகி பரபரப்பை கூட்டியது.

ஆபாச படங்கள்
தொடர்ந்து அவரது அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீசார் ஆபாச படங்கள் அடங்கிய கம்ப்யூட்டர்கள், ஹார்ட் டிஸ்க்கள், பென்டிரைவுகளை பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். அதில் பல இளம் பெண்களின் அரை நிர்வாண படம் உள்ளிட்ட ஆபாச படங்கள் இருந்தன. இதை அடுத்து பாலியல் பலாத்காரம் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சேலம் காவல்துறையினர் வேல் சத்ரியனை ஆறு நாள் விசாரணை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் போலீசாரிடம் இளம்பெண்களை மயக்கியது எப்படி என வேல்சத்ரியன் பல உண்மைகளை கூறியதாக தகவல் வழியாக இருக்கிறது.

வசப்படுத்தியது எப்படி?
நோ என்ற பெயரில் தான் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதற்கு துணை நடிகைகள் தேவை என சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி இருக்கிறார் வேல் சத்ரியன். இதனை பார்த்து சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்கள் சினிமா வாய்ப்பு தேடி வேல் சத்திரியனை சந்தித்துள்ளனர். அவர்களிடம் நல்லவர் போல பேசிய வேல் சத்ரியன் அலுவலகத்தில் இருந்த கேமரா செட்டப் முன்பு அவர்களை நடிக்க வைத்து வீடியோ எடுத்திருக்கிறார். மேலும் அவர்களுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்து நன்றாக நடிக்கிறீர்கள் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு தருகிறேன் எனக் கூறி நல்லவர் போல பேசி நம்ப வைத்திருக்கிறார்.

சிக்கும் நண்பர்கள்!
தொடர்ந்து ஒத்திகை பார்க்க வேண்டும் என அந்த பெண்களை வரவழைத்து முத்த காட்சிகளில் நடிக்க முடியுமா ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க முடியுமா எங்கே நடித்துக் காட்டு எனக்கூறி அவர்களிடம் அத்துமீறி இருக்கிறார். இதில் ஓரளவு ஒத்துழைக்கும் பெண்களை அவரது அலுவலகத்திலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த செயல்களுக்கு வேல் சத்ரியனின் நண்பர்களும் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு வருகிறது. வேல் சத்ரியனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்தில் அவர்களது நண்பர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்களது விபரங்களை சேகரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications