தவெக எம்.எல்.ஏவுக்கு மயில் இறகு மாலை.. இணைப்பு விழாவில் வெடித்த சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனுக்கு மயிலிறகு மாலை அணிவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு மயில் இறகு மாலை அணிவிக்கப்பட்டது தொடர்பாக வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சேலம் சூரமங்கலத்தில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணன் அலுவலகத்தில், மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் விழா நேற்று நடந்தது. சேலம் மாநகராட்சி அதிமுக மாநகர பிரதிநிதிகள் சண்முகம், கண்ணன், அருள், ஐ.டி விங் மணி மற்றும் திமுகவில் இருந்து வீரபாண்டியார் நற்பணி மன்ற நிர்வாகி ஜெயராஜ், இளைஞரணி அமைப்பாளர் மைக்கேல் உள்பட, 100க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்.

tvk salem

முன்னதாக, மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெக கட்சியில் இணைய வந்தவர்கள், லட்சுமணனுக்கு மயில் இறகு மாலை அணிவித்தனர். தேசிய பறவையாக உள்ள மயிலின் இறகுகளை, மாலையாக அணிவித்தது வனத்துறை சட்டபடி குற்றம் என்பதால், இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கட்சி நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்பது விதிமுறை. அதை மீறி, இணைப்பு விழாவை எம்.எல்.ஏ அலுவலகத்தில் வைத்து தவெக எம்.எல்.ஏ லட்சுமணன் நடத்தியதும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

மயில் இறகை கொண்டு மாலை அணிவித்து ஊர்வலம் வந்ததாகக் கூறி ஏற்கனவே கேரள மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், எம்எல்ஏவுக்கு மயில் இறகு மாலை அணிவிக்கப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறை முன்வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இயற்கையாக உதிர்ந்த இறகுகளைச் சேகரிப்பது குற்றமல்ல என்றாலும், இறகுகளை விற்பனை செய்வதும், வாங்குவதும், இந்தியாவில் சட்டவிரோத செயல் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையான மயில் இறகில் செய்யப்பட்ட மாலையா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+