சேலம் அப்படியே அடையாளமே தெரியாமல் மாறப்போகுது.. திமுகவின் மாஸ்டர் பிளான்.. லிஸ்ட்லயே இல்லையே
சேலம்: சேலத்திற்கான பல்வேறு புதிய அறிவிப்புகளை திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது. சேலத்தில் செல்வகணபதி போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் இவர் மீண்டும் எம்பி தேர்தலில் களமிறங்குவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

சேலம் பணிகள்: இந்த நிலையில்தான் சேலத்திற்கான பல்வேறு புதிய அறிவிப்புகளை திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு உள்ளது.
சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். பன்னாட்டு விமான நிலையம் அமைக்க பரிசீலிக்கப்படும்.
சேலத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய தொழில்பூங்கா அமைக்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் ஜவுளி, ஜவ்வரிசி, நார் கயிறு, கொலுசு, விவசாயம் என பல துறைகளில் உற்பத்தி அதிக அளவில் செய்யப்படுகிறது. எனவே, அங்கு ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.
சேலம் மெட்ரோவிற்கு ஒப்புதல் பெறப்படும்.
2024 லோக்சபா தேர்தலுக்காக திமுக சார்பாக தேர்தல் வாக்குறுதி அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. பல துறைகளை, மக்களை, பெண்களை, மாணவர்களை கவரும் விதமாக வாக்குறுதிகள் வெளியிடப்பட்டு உள்ளன. முக்கியமாக கோவை, ஓசூருக்கு என்றும் சில வாக்குறுதிகள் வெளியிடப்பட்டு உள்ளன.
நாடு முழுவதும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நிதி உதவி
நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்
பெட்ரோல் விலை ரூ.75-க்கு விற்பனை செய்யப்படும்
நாடு முழுவதும் மாணவர்கள் கடன்கள் ரத்து செய்யப்படும்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500க்கு குறைக்கப்படும்
கவர்னர் பதவி ஒழிக்கப்படும் வரை, மாநிலத்திற்கு ஒரு கவர்னரை மாநில முதல்வரின் ஒப்புதலோடு நியமிக்க வேண்டும். ஆளுநர்களுக்கு குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கும் பிரிவு 361 திருத்தப்படும்.
பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது
திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்
100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்
இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை
ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படும்
இஸ்லாமியர் நலனுக்கான சச்சார் கமிட்டி அறிக்கை பரிந்துரைகள் தாக்கல் செய்யப்படும்
மாணவர்களுக்கு வட்டியில்லாமல் ரூ.4 லட்சம் கடன் வழங்கப்படும்
சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும்
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மத்திய அரசு தேர்வு
புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்
பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு உடனே அமல்படுத்தப்படும்
இந்தியா முழுவதும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்
வேட்பாளர் லிஸ்ட்: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில்,
1 ) வடசென்னை - கலாநிதி வீராசாமி
2 ) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன்
4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம்
5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
6) வேலூர் - கதிர் ஆனந்த்
7 ) தருமபுரி - அ.மணி
8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
9 ) சேலம் - செல்வ கணபதி
10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன்
11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா
12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி
13 ) கோவை - கணபதி ராஜ்குமார்
14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி
15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி
16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார்
17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
18 ) பெரம்பலூர் - அருண் நேரு
19 ) தேனி - தங்க தமிழ்செல்வன்
20 ) ஈரோடு - பிரகாஷ்
21 ) ஆரணி - தரணி வேந்தன்












Click it and Unblock the Notifications