இபிஎஸ் வசிக்கும் வார்டை கைப்பற்றிய திமுக..அதிமுக பரிதாப தோல்வி - அட என்ன இப்படி ஆயிருச்சே
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வெற்றியைப் பதிவு செய்து வருகிறது ஆளுங்கட்சியான திமுக. எடப்பாடி பழனிச்சாமி வசிக்கும் வார்டில் அதிமுக பரிதாபமாக தோல்வியடைந்துள்ளது.
சேலம்: எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டையும் சேர்த்து கைப்பற்றியுள்ளது திமுக. எடப்பாடி சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 23ஆவது வார்டில் வசிக்கிறார். இங்கே அதிமுக தோல்வியுற்றிருப்பது தொண்டர்களுக்கு பேரிடியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12, 601 பதவிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ளது. அதிமுக குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வெற்றி பெற்றிருந்தாலும் இபிஎஸ், ஒபிஎஸ், எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோரின் கோட்டை என கருதப்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடி முக்கிய தலைவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

திமுக வெற்றிக்கொடி
அதிமுக கொங்கு மண்டலத்தில் எப்போதுமே பலமாக இருக்கும். தமிழ்நாடு முழுவதுமே பல தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுகவால் கோவையில் ஒரு இடங்களில் கூட வெற்றிபெற முடியவில்லை. இதுவே அதற்கு சாட்சி. ஆனால் இதனை சவாலாக எடுத்துக்கொண்டு சேலம், கோவை, நாமக்கல், திருப்பூர் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது திமுக.

திமுக அபார வெற்றி
எஸ்பி வேலுமணியின் இரும்புக்கோட்டையாக இருந்த தொண்டாமுத்தூர் பேரூராட்சியை திமுக முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. அங்குள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை வென்று கறுப்பு, சிவப்பு கொடியைப் பறக்கவிட்டுள்ளது திமுக. இதே போல வால்பாறை நகராட்சியையும் கைப்பற்றியுள்ளது. கோவையிலும் திமுகவின் கொடியே பறக்கிறது.

இபிஎஸ் வசிக்கும் வார்டு
எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டையும் சேர்த்து திமுக கைப்பற்றியுள்ளது திமுக. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 23ஆவது வார்டில் வசிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இங்கே அதிமுக தோல்வியடைந்துள்ளது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி வாகை
குடும்ப பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்காதது, நகைக்கடன் தள்ளுபடி, பொங்கல் பரிசில் குறைபாடு, பாஜகவை விட்டு பிரிந்ததால் கிடைக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் என பல்வேறு சாதகமான அம்சங்கள் அதிமுகவின் பக்கம் இருந்தாலும் அனைத்தையும் தவிடுபொடியாக்கி வெற்றிவாகை சூடியுள்ளது திமுக.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications