அதிமுக பொதுச்செயலாளர் “யார்” தெரியுமா? கறுப்பு “ஆடு” - எடப்பாடி பேச்சை கேட்டு தொண்டர்கள் “விசில்”
சேலம்: அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்துடன் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகியுள்ள நிலையில் பொதுச்செயலாளர் யார் என்றும், கறுப்பு ஆடு யாரென்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க கடந்த ஜூன் மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது. அப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் இடையே வெடித்த மோதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
அதன் விளைவாகவே முதல் பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு ஜூலை 11ம் தேதி இரண்டாவது பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக மகுடம் சூட்டிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

மாறி மாறி தீர்ப்பு
ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது. ஆனால், 2 வாரம் முன் எடப்பாடி பழனிசாமி அமர்வு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.

மேல்முறையீடு
இந்த நிலையில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தீவிர ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பால் உற்சாகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தற்போது சோர்வடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓபிஎஸுக்கு நெருக்கடி
இதனால் ஒரு பக்கம் சட்டப்போராட்டத்துக்கு மத்தியில் தன்னுடைய ஆதாரவாளர்களை தக்க வைக்க வேண்டும் என்ற நெருக்கடியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.

பொதுச்செயலாளர்
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவில் தனிப்பட்ட யாரும் பொதுச்செயலாளர் கிடையாது. ஒட்டுமொத்த தொண்டனின் எதிர்பார்ப்பை பிரதிபலிப்பவர்தான் பொதுச்செயலாளர். அதுதான் பொதுச்செயலாளரின் கடமை. அதற்குதான் அதிமுக செயல்வடிவம் கொடுத்து இருக்கிறது. நீங்கள் எங்களின் பொதுக்குழு உறுப்பினர்கள் அமர்ந்திருந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.

கறுப்பு ஆடு
அழகாய் அற்புதமாய் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி அறிவித்தார்கள். அதை பொறுக்க முடியவில்லை. எப்படியாவது இந்த கட்சி பிளவுபடாதா என்று முயற்சி செய்கிறார்கள். அதற்கு சிலர் துணை போகிறார்கள். யார் யார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். இந்த கட்சிக்குள் இருக்கும் கறுப்பு ஆடு யார் என்று தெரியும். அதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளோம்." என்றார்.












Click it and Unblock the Notifications