பார்த்தீங்களா.. நான் அப்பவே சொன்னேன்ல! சிரித்த முகத்துடன் எடப்பாடி! சேலத்தில் என்ன சொன்னார் தெரியுமா?
சேலம் : அதிமுக அலுவலக சாவி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இது உண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த வெற்றி என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் அங்கிருந்த பொருட்கள் சூறையாடப்பட்தையடுத்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் சீல் வைக்கப்பட்டது
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்நாளில் சீலை அகற்றி எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஓ.பன்னீர்செல்வம்
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சந்திர சூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜர் ஆனார். அப்போது வாதிட்ட அவர்," அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வருவதாகவும் அவருக்கு கட்சியின் அலுவலகத்திற்கு அனுமதி இல்லாதது கவலை அளிக்கிறது எனவும் எனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் வழங்கப்பட்டு இருக்கின்ற அதிமுக அலுவலக சாவியை ஓ பன்னீர்செல்வம் தரப்பிடும் வழங்க வேண்டும்" என கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்," கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் எனவும் அதிமுகவை பொறுத்தவரை அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

ஏற்றுக்கொள்ள முடியாது
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கருத்தை கேட்டனர். அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்," ஜூலை 11ஆம் தேதி இருதரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது இதன் காரணமாகத்தான் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது என கூறினார். தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் கலவரம் மற்றும் நடந்த சம்பவங்களுக்கு அதிர்ச்சியை தெரிவித்துக் கொண்ட நீதிபதிகள் அரசியல் கட்சி அலுவலகத்திற்கு தனி நபர்கள் போன்று அடித்துக் கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருக்கிறது என கூறினார்.

அனுமதிக்க முடியாது
மேலும்,"அதிமுக அலுவலகத்தில் நடந்த சண்டை பக்கத்து வீட்டுக்காரர்களின் சண்டை போல ஒரு பிரச்சனை அல்ல. ஒரு அரசியல் கட்சியை செயல்பட விடாமல் தடுப்பது ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது" என கூறினர். மேலும் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு வழங்கி தவறு என சொல்வது நியாயம் இல்லை" என்று தெரிவித்து நீதிபதிகள் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். அதே நேரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறும் ஓ பன்னீர்செல்வத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

தீர்ப்பு மகிழ்ச்சி
இந்த நிலையில் சேலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய எடப்பாடி பழனிச்சாமி இடம் அதிமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி," சாதகமான தீர்ப்பு என நீங்களே சொல்லி இருக்கிறீர்கள் உண்மையும் தர்மமும் நீதியும் வென்று இருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" எனக் கூறினார்.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications