மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிகே மணி! பதறிப் போன பாமக! சட்டென போனைப் போட்ட முதல்வர் ஸ்டாலின்!
சேலம் : பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போதைய கௌரவ தலைவருமான ஜிகே மணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியில் நீண்ட காலமாக தலைவராக இருந்த ஜிகே மணி, கட்சியின் எதிர்கால நலன் கருதி கௌரவத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்ததோடு, அவரே அந்த தீர்மானத்தையும் முன்மொழிந்தார்.

ஜிகே மணி
இதையடுத்து கட்சியின் கவுரவத் தலைவராக இருக்கும் ஜிகே மணி, தமிழக சட்டசபை உறுப்பினராகவும் தொடர்கிறார். அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை கண்காணிப்பது. சட்டப்பேரவையில் பாமகவை பிரநிதித்துவப்படுத்துவது என கடந்த காலங்களைப் போலவே பிசியாகவே இருக்கிறார் ஜிகே.மணி. பாமக நிறுவனர் ராமதாஸின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகவும் நீண்ட காலமாக இருப்பவர்.

உடல் நலக் குறைவு
இந்நிலையில் ஜிகே மணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் சேலத்தில் இருந்து பெண்ணாகரம் சென்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜிகே மணிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

பாமக ராமதாஸ்
இதை அடுத்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜிகே மணி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜிகே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவலை அறிந்து பாமக நிறுவனர் ராமதாஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் அவருக்கு உரிய சிகிச்சை வழங்க மருத்துவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
தொடர்ந்து பாமக சட்டமன்ற உறுப்பினரான அருள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் ஜிகே.மணியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜிகே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவலை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜிகே மணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் விரைவில் அவர் நலம் பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications