Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்.. வரலாற்று மரபு தொடரும்.. சபதம் எடுத்த திமுக இளைஞரணி!

Subscribe to Oneindia Tamil

சேலம்: 'ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்' என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டுவோம் என சூளுரைத்து திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 25 தீர்மானங்களை முன்மொழிந்தார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இந்த மாநாட்டில் மத்திய அரசைக் கண்டித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் லோக்சபா தேர்தலையொட்டி, பாஜகவை வீழ்த்துவோம் எனச் சூளுரைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Hitlers defeat to Stalin will continue: resolution has been passed in DMK youth wing conference

பாஜகவை வீழ்த்த தீர்மானம்: நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம். 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் இத்தகைய சர்வாதிகார சக்திகளை முழுமையாக வீழ்த்திட, இந்த மாநாடு உறுதியேற்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சமையல் சிலிண்டர் விலை, பெட்ரோல்-டீசல் விலை ஆகியவற்றைக் கடுமையாக உயர்த்தி, மக்களை வாட்டி வதைப்பதும், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வதாரத்தைப் பாதிக்கச் செய்ததுமே வேதனை மிகுந்த சாதனைகளாக இருக்கின்றன.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காகும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், ஏழை-எளிய மக்களை நடுஇரவில் நடுரோட்டில் நிறுத்திய ஒன்றிய பா.ஜக. அரசு, கறுப்புப் பணத்தையும் ஒழிக்கவில்லை, கறுப்புப் பணத்தை ஒழித்து, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாய் போடுவதாகக்கூறி, சல்லிப் பைசாவையும் போடவில்லை.

தனது வாக்குறுதிகள் அனைத்திலும் தோல்வியடைந்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, மக்களுக்குச் செய்த துரோகங்களை மறைக்க, மதவாத அரசியலை முன்னெடுத்து, அயோத்தி இராமர் கோவிலை வைத்து வாக்குகள் பெற்றுவிடலாம் என நினைப்பது ஆன்மிகவாதிகளையும் ஏமாற்றும் செயலாகும். நாட்டில் உள்ள இந்துக்களில் பெரும்பான்மையான மக்களை 10 ஆண்டுகாலமாக ஏமாற்றிவிட்டு, இராமர் கோவிலைக் காட்டி, இந்துக்கள் ஓட்டுகளை வாங்கிவிடலாம் என அரசியல் கணக்குடன், கடவுளையும் ஏமாற்ற நினைக்கும் இந்து மக்களின் உண்மையான எதிரியான பா.ஜ.க.வின் மதவாத அரசியலை வீடு வீடாக அம்பலப்படுத்தும் பரப்புரையை இளைஞர் அணி மேற்கொள்ளும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் மதவெறி, வெறுப்பரசியல், மாநில உரிமைகள் பறிப்பு, அரசியல் பழிவாங்கல், சிறுபான்மையினர் மனங்களில் அச்சத்தை விதைத்தல், உணவு அரசியல், நவீனத் தீண்டாமை, மொழி ஆதிக்கம் உள்ளிட்டவற்றைத் தீவிரப்படுத்தி, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் பன்முகத்தன்மைக்கும் எதிரான கொள்கைகளால் பத்தாண்டு காலம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், இந்தியாவைச் சீர்கெடச் செய்து வரும் பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திடும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம் தான்: மேலும், 'இந்தியா' கூட்டணியை உருவாக்குவதிலும், வழிகாட்டுவதிலும் முன்னணி பங்காற்றி வருபவரும், மனிதநேய சக்திகளை ஒன்றிணைத்தால், பாசிசத்தை வீழ்த்திக் காட்ட முடியும் என 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டியவருமான திராவிட மாடல் முதலமைச்சர்-கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், இயங்கும் கழக இளைஞர் அணி, கழகத் தலைவரின் கட்டளைக்கேற்ப 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் முன்னின்று செயலாற்றி, தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, 'ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்' என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில், இந்திய ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டும் எனச் சூளுரைக்கிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+