வெளுத்த கன மழை.. ஏற்காட்டில் நிலச்சரிவு.. பெரும் போக்குவரத்து பாதிப்பு
சேலம்: ஏற்காட்டில் ஏற்பட்ட நில சரிவால் சாலையில் சரிந்த பாறையை வெடி வைத்து அப்புறப்படுத்துவதால் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உட்பட பல பகுதிகளில் மழை பெய்தன. சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் கன மழை கொட்டியது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு பெய்த தொடர் மழையால் ஏற்காடு, மலை பாதையில் உள்ள 60 அடி பாலம் அருகில் நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன.
சம்பவமறிந்து அங்கு சென்ற நெடுஞ்சாலை துறையினர் நேற்று இரவு தற்காலிகமாக சாலையை சரி செய்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
பின்னர் இன்று காலை அந்த பாறையை அகற்றும் பணியை நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைத்து செய்துவருகின்றனர். அதன் ஒருபகுதியாக அந்த பாறையை கப்ரஸர் உதவியுடன் துளையிட்டு வெடி வைத்து அகற்றும் பணி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.
அதன் காரணமாக பாறைக்கு வெடி வைப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஏற்காட்டில் இருந்து மலைப்பாதை வழியாக சேலம் செல்லும் வாகனகள் ஏற்காடு 20வது கொண்டாய் ஊசி வளைவு அருகிலும் , சேலத்தில் இருந்து ஏற்காடு வரும் வாகனகள் அனைத்தும் ஏற்காடு அடிவாதத்தில் உள்ள காவல் சோதனை சாவடியிலும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.
இதன் காரணமாக இந்த இரு இடங்களிலும் ஏகப்பட்ட வாகனகள் சுமார் 3 மணி நேரமாக நின்று கொண்டிருந்தது. மேலும் வாகனகள் தடுத்து நிறுத்தபட்டுள்ளதால் அங்கு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெடி வைத்து பாறை தகர்க்கப்பட்டதும் வாகனகள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படும் என்று காவல் துறையினர் கூறினார்.
-
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications