சேலத்தில் மோடி.. அதிமுக சார்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம்.. அழைப்பு விடுத்த கே.பி. ராமலிங்கம்
சேலம்: பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் பேசுவார் என்று அழைப்பு விடுத்தார் பாஜக துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம். கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம் பத்தாண்டு காலம் பிரதமர் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டார்.
தேசிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆக பாடுபடுவோம் என்று கூறினார்.

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிரதமர் மோடியும் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.
பொதுக்கூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசினார். டாக்டர் ராமதாஸின் கைகளை பிடித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. அப்போது மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று உற்சாக குரல் எழுப்பினர். ஓ. பன்னீர் செல்வத்தின் கைகளை பிடித்து சிரித்து நலம் விசாரித்து பேசினார் பிரதமர் மோடி. கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் சால்வை அணிவித்தனர்.
பிரதமர் மோடி வருவதற்கு முன்பு கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் சில நிமிடங்கள் மட்டுமே பேசி முடித்தனர். அன்புமணி ராமதாஸ் பேசிய பின்னர் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசுவார் என அழைப்பு விடுத்தார் கே.பி. ராமலிங்கம். அப்போது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசிய ஓ.பன்னீர் செல்வம், பத்தாண்டு காலமாக பிரதமர் மோடியின் சாதனைகளைப் பட்டியலிட்டார். ஒரே கையெழுத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு அரசாணை பிறப்பித்தவர் என்று கூறினார் ஓ.பன்னீர்செல்வம்.
பிரதமர் மோடிக்கு சேலம் பொதுக்கூட்ட மேடையில் ஜவ்வரிசி, அர்த்தநாரீஸ்வரர் சிலை போன்றவை நினைவு பரிசளிக்கப்பட்டது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications