மேட்டூர் அணை நிரம்பியது: 42வது முறையாக 120 அடியை எட்டி சாதனை.. விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணை 42வது முறையாக நிரம்பியுள்ளது. அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சேலம்: மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை, 42 வது முறையாக எட்டி சாதனை படைத்துள்ளது.மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளது. காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வழிகின்றன. கர்நாடகா அணைகளில் இருந்து கடந்த 8ஆம் தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் தற்போது, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1.20 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 349 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேட்டூர் அணையில் இருந்து பாசன தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

42வது முறையாக நிரம்பிய அணை
அதேநேரத்தில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீடிக்கும் நிலையில், அணையின் நீர் மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை அதாவது 93.45 டி.எம்.சி.யை எட்டி உள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்ட ஆண்டில் இருந்து இதுவரை 41 முறை நிரம்பியுள்ளது. தற்போது 42வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள்
இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று மாலை மேட்டூர் அணை பகுதியை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வெள்ள அபாய எச்சரிக்கை
அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவது அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையையொட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஒரிரு தினங்களுக்குள் 120 அடியை எட்டும் என்பதால் தற்போது 25,000 கனஅடி நீரானது காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு உள்ளது. எனவே காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது. நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும்.

அவசரகால உதவி எண்கள்
மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம் - 1077, காவல்துறை - 100, தீயணைப்பு துறை - 101, மருத்துவ உதவி - 104, ஆம்புலன்ஸ் உதவி - 108 ஆகியவற்றுக்கும் மற்றும் குமாரபாளையம் வட்டத்திற்கு 9786984577, திருச்செங்கோடு வட்டத்திற்கு 94450 00545, பரமத்திவேலுர் வட்டத்திற்கு 94450 00546, மோகனுர் வட்டத்திற்கு 99524 12755 ஆகிய எண்களில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும், ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications